நான் உன்னை அழிப்பேன்! பொலிஸாரின் கைதுக்கு முன்பு ஊழியரின் முகத்தில் துப்பிய நபரால் பரபரப்பு
பிரித்தானியாவில் நபர் ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன் டெஸ்கோ ஊழியரின் முகத்தில் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுவெளியில் சண்டை
கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள ஹாக்னியில் இரண்டு நபர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடை ஊழியரிடம் 36 வயதுடைய நபர் ஒருவர் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாக பொலிஸாருக்கு புகார் அளிக்கப்பட்டது.
உடனடியாக அங்கு விரைந்த பொலிசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த குறித்த நபரை கைது செய்தனர்.
மோசமாக நடந்துகொண்ட நபர்
அவரது கைகளை பொலிஸார் பிடித்துக் கொண்ட நிலையில், ஊழியரைப் பார்த்து ''நான் உன்னை அழிப்பேன்'' என்று கோபமாக கூறினார். அத்துடன் ஊழியர் முகத்தில் துப்பி மோசமாக நடந்துகொண்டார்.
பின்னர் அவரை பொலிஸார் அழைத்துச் சென்றனர். அவர் கிழக்கு லண்டன் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபரிடம் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
@Jam Press Vid/CrimeLdn
@Jam Press Vid/CrimeLdn

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.