பிரித்தானியாவில் பட்டப்பகலில் வெறிச்செயல்! விரட்டி விரட்டி வெட்டப்பட்ட 40 வயது நபர்
பிரித்தானியாவில் பட்டப்பகலில் பிஸியான வணிக வளாகத்தில் 40 வயது நபரை, அடையாளம் தெரியாத நபர் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பய் ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் அமைந்துள்ள மிடில்டன் ஷாப்பிங் சென்டரில், சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இந்த அதிரவைக்கும் சம்பவம் நடந்தது.
வளாகத்தின் முதல் தளத்தில், திடீரென ஜாம்பீ கத்தியுடன் நுழைந்த ஒரு அடையாளம் தெரியாத நபர், 40 வயது மிக்க மற்றோரு நபரை குறைந்தது 5 முறை கழுத்து மற்றும் தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார்.
பின்னர் அவசர உதவிக்கு அழைக்கப்பட்டதை அடுத்து, காயம் பட்ட நபர் மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளார். அவருக்கு பலமான வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன, இருப்பினும் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மான்செஸ்டர் பெருநகர பொலிஸார் தப்பி ஓடிய நபரை, அவர் பயன்படுத்திய ஆயுதத்துடன் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்தில் பொலிஸார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



