புத்தாண்டு கொண்டாட்டத்தில் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த கத்திக்குத்து: பொலிஸார் விசாரணை
அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தன்று டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் மீண்டும் மீண்டும் கத்தி குத்து சம்பவத்திற்கு உள்ளாகியுள்ளார்.
புத்தாண்டில் கத்தி குத்து
அமெரிக்காவில் சனிக்கிழமையன்று டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நகரம் தயாராகிக் கொண்டிருந்த போது கத்தி குத்து சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இதில் 41 வயதான ஆண் ஒருவர் உடல் மற்றும் முதுகில் பல கத்திக் காயங்களால் பாதிக்கப்பட்டார் மற்றும் தீவிரமான நிலையில் பெல்லூவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நியூயார்க் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஃபாக்ஸ் நியூஸ் டிஜிட்டலிடம் வழங்கிய தகவலில், 41 வயது நபர் ஒருவர் 7வது அவென்யூ-வின் 40வது தெருவின் மூலையில் மற்றொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், இதனால் சனிக்கிழமை நபர்களில் ஒருவர் பல முறை கத்தியால் குத்தப்பட்டார்.
பொலிஸார் விசாரணை
சம்பவத்தை தொடர்ந்து கத்தியால் குத்திய நபர் தப்பி ஓடியதால் குற்றவாளியை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை.
ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் கத்தியால் குத்திய ஆணுக்கு 20 வயது, கருமையான நிறம். அவர் கருப்பு ஜாக்கெட் மற்றும் கருப்பு பேண்ட் ஆகியவற்றை அணிந்து இருந்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த மோதல் கும்பல் தொடர்பானது என்று ஃபாக்ஸ் நியூஸ உறுதிப்படுத்தியுள்ளது.
சண்டைக்கான காரணம் குறித்து போலீசார் உறுதியாக தெரியவில்லை ஆனால் இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.