லண்டனில் அப்பாவி பூ வியாபாரிக்கு நேர்ந்த துயரம்: புகைப்படத்துடன் வெளியான தகவல்
லண்டனில் கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்ற பூ வியாபாரி பட்டப்பகலில் கத்தியால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். இஸ்லிங்டனில் உள்ள எசெக்ஸ் சாலையில் பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்துள்ளது.
கொல்லப்பட்டவர் 50 வயது கடந்த Tony Eastlake என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று சுமார் 5.30 மணியளவில் பொலிசார் அந்த நபரின் சடலத்தை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பூ வியாபாரம் செய்து வரும் Tony Eastlake, கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்றதில் கத்திக்குத்துக்கு இலக்கானதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக Tony Eastlake இப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. வழிப்பறி கொள்ளையை தடுத்து நிறுத்த முயன்றவர் தமது உயிரை பறிக்கொடுத்துள்ளார் என ஒருவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிந்துள்ள பொலிசார், ஆயுததாரியை தேடி வருகின்றனர். மேலும், கொலை தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.