நிறைமாத கர்ப்பிணியை கத்தியால் குத்திய நபர்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
பிரித்தானிய கிராமம் ஒன்றில், நிறைமாத கர்ப்பிணி ஒருவரைக் கத்தியால் குத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பள்ளியின் முன் காத்திருந்த நபர்
வேல்ஸ் நாட்டிலுள்ள Aberfan என்னும் கிராமத்தில், ஒரு பெண் தன் பிள்ளைகளை பள்ளியில் விடுவதற்காக வந்துள்ளார். அவர் பிள்ளைகளை பள்ளியில் விட்டுவிட்டு வெளியே வரவும், அங்கு நீண்ட நேரமாக அவரது வருகைக்காக காத்திருந்த ஒருவர், அந்தப் பெண்ணை கத்தியால் சரமாரியாக ஐந்துமுறை குத்தியுள்ளார்.
dailymail
நேற்று காலை 9.10 மணியளவில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்த நிலையில், மக்கள் ஓடிவந்ததால் கத்தியால் குத்தியவர் தப்பியோடியுள்ளார்.
யார் அந்த நபர்?
கத்தியால் குத்தப்பட்ட 29 வயது பெண் நிறைமாத கர்ப்பிணி ஆவார். அவரது பெயர் Andreea Pintilli. கிறிஸ்துமஸ் நேரத்தில் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
TikTok
என்றாலும், அவர் குத்தப்பட்டதும் உடனடியாக ஓடிவந்தவர்களில் ஒருவர் Katie Roberts (31) என்னும் செவிலியர் என்பதால், Andreeaவின் உயிர் காப்பாற்றப்பட்டதாக கருதப்படுகிறது.
dailymail
ஏழு மணி நேரத்திற்குப் பின், வீடு ஒன்றில் பதுங்கியிருந்த குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். 28 வயதான அவர், Andreeaவுக்கு அறிமுகமானவர்தான் என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், விசாரணை தொடர்கிறது.
dailymail
இந்த சம்பவம் காலை நேரத்தில் நிகழ்ந்ததால், பள்ளிக்கு வந்த பிள்ளைகளும், பிள்ளைகளை பள்ளியில் விடவந்த பெற்றோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
என்றாலும், கத்தியால் குத்தப்பட்ட Andreeaவுக்கோ, அவரது வயிற்றிலிருந்த குழந்தைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது ஆறுதலளிக்கும் செய்தி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |