லொட்டரியில் பரிசு கிடைக்காததால் ஆத்திரம்; கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து
man stabbed shop owner for not won lottery prize: தான் வாங்கிய லொட்டரி டிக்கெட்டிற்கு பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் வாடிக்கையாளர் லொட்டரி கடை உரிமையாளரை கத்தியால் தாக்கியுள்ளார்.
ஓணம் பம்பர் லொட்டரி
கேரள மாநிலத்தில் வருடந்தோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஓணம் பம்பர் லொட்டரி முடிவுகள் 2026 செப்டம்பர் 26 அன்று வெளியிடப்பட்டன.

TL 360615 என்ற டிக்கெட் எண் முதல் பரிசாக ரூ.30 கோடி ஜாக்பாட்டைவென்றுள்ளது.
இரண்டாம் பரிசு ரூ.5 கோடி, மூன்றாம் பரிசு ரூ.1 கோடி என பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் சிறிய பரிசுகளையும் வென்றுள்ளனர்.
ரூ.500 மதிப்புள்ள 90 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
லொட்டரி கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து
தமிழ்நாட்டின் பட்டவயலைச் சேர்ந்த 44 வயதான சிவகுமார், வழக்கமாக கேரளாவின் நம்பியர்குன்னுவில் உள்ள பூங்காவனம் லொட்டரி கடையில் லொட்டரி டிக்கெட்கள் வாங்குவார்.
அங்கு அவர் வாங்கிய ஓணம் பம்பர் லொட்டரி டிக்கெட்டுக்குப் பரிசு கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் நேற்று கடைக்கு வந்த அவர், உரிமையாளருமான 37 வயதான வினிதா ராஜீஷ் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதைத்தொடர்ந்து, வினிதாவின் முகத்தில் மிளகாய்பொடியை தூவிய சிவகுமார், மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளார். இதில், வினிதாவின் கழுத்திலும் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
வினிதாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கபக்கத்தினர், அங்கு வந்து தப்பியோட முயன்ற சிவகுமாரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பலத்த காயமடைந்த வினிதா, சிகிச்சைக்காக சுல்தான் பத்தேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.