லண்டன் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டவர் யார்? புகைப்படத்துடன் வெளியான தகவல்

Crime London Murder Brixton Shane Jerome
By Ragavan Jul 23, 2021 04:57 AM GMT
Report

தெற்கு லண்டனில் பிரிக்ஸ்டன் டியூப் ரயில் நிலையம் அருகே குத்தி கொலைசெய்யப்பட்ட இளைஞரின் புகைப்படம் மற்றும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

லண்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், பிரிக்ஸ்டன் நிலத்தடி குழாய் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் நடந்தது.

இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த அந்த இளைஞரை காப்பாற்ற, லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் சேவை முயற்சித்த போதிலும், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

லண்டன் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டவர் யார்? புகைப்படத்துடன் வெளியான தகவல் | Man Stabbed To Death Brixton Uk Shane Jerome Photo

அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் அப்போது அவரது விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

அவரது பெயர் ஷேன் ஜெரோம் (Shane Jerome). 23 வயதாகும் அவர் சம்பவம் நடந்த இரவு ஒரு இசை விடியோவை தயாரித்துக்கொண்டிருந்தார்.

அவருடன் அவரது காதலி என்று சொல்லப்படும் பெண் உட்பட இன்னும் சிலர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் ஒருவர் ஜெரோமை கொலை செய்தாக கூறப்படுகிறது. அப்போது, தடுக்க முயன்ற அந்த பெண்ணுக்கு வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

லண்டன் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டவர் யார்? புகைப்படத்துடன் வெளியான தகவல் | Man Stabbed To Death Brixton Uk Shane Jerome Photo

அந்த இடத்தில் கூட்டம் கூடியதால் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவத்தில் லம்போர்கினி, ஃபெராரி மற்றும் ஒரு கருப்பு ரேஞ்ச் ரோவர் மற்றும் இரண்டு குவாட் பைக்குகள் உள்ளிட்ட பல உயர் ரக கார்கள் சம்பந்தப்பட்டதாக ஒரு சாட்சியாளர் தெரிவித்தார் .

லண்டன் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டவர் யார்? புகைப்படத்துடன் வெளியான தகவல் | Man Stabbed To Death Brixton Uk Shane Jerome Photo

பிரிக்ஸ்டனில் இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலேயே, சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்திருந்தனர், ஆனால் அவர் தற்போது எந்தவித வழக்குப்பதிவுவும் செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US