சொந்த தந்தையை குத்திக் கொலை செய்த சுவிஸ் நாட்டவர்
சுவிட்சர்லாந்தில், தன் சொந்த தந்தையையே ஒருவர் குத்திக் கொலை செய்த நிலையில், அவர் மன நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சொந்த தந்தையை கொலை செய்த நபர்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள Plainpalais என்னுமிடத்தில் வாழும் 31 வயது நபர் ஒருவர், தன் தந்தையைக் கத்தியால் குத்தினார்.
ஒரே வீட்டில் வாழும் அந்த நபரும், 65 வயதுடைய அவருடைய தந்தையும், அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதுண்டு என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று அந்த நபர் தன் தந்தையைக் கத்தியால் குத்தியுள்ளார்.
ஏற்கனவே கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியிருந்த அந்த தந்தை, இதயத்தில் கத்தி பாய்ந்ததால் உயிரிழந்துவிட்டார்.
அந்த 31 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன் அவர் குற்றச்செயல் எதிலும் ஈடுபட்டதில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அவர் bipolar disorder என்னும் மன நல பாதிப்பு கொண்டவர் என்பதும், ஏற்கனவே அவர் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |