லண்டனில் தெருச் சண்டையில் குத்தி கொல்லப்பட்ட நபர்! முதன் முறையாக வெளியான புகைப்படம்
லண்டனில் இந்த மாத துவக்கத்தில் தெருச் சண்டையில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், அவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Rainham-ல் உள்ள Louise Gardens பகுதியில், இந்த மாதத்தின்(டிசம்பர் 1-ஆம் திகதி) துவக்கத்தில் இரவு உள்ளூர் நேரப்படி 7.53 மணிக்கு, ஒரு குழு மோதிக் கொள்வதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது, நபர் ஒருவர் பேச்சு மூச்சற்று, கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளார். பெண் ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவரின் பெயர் Amandeep Mickey Singh(37) என்பது தெரியவந்தது.
பொலிசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 9(டிசம்பர் மாதம்)-ஆம் திகதி 17 (A), 14 (B) மற்றும் 14 (C) மதிக்கத்தக்க சிறுவர்கள் சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின் இவர்கள் கடந்த 11-ஆம் திகதி Thames Magistrates நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் விசாரணை இன்று மீண்டு வந்த நிலையில், இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 21 மற்றும் 48 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள் மற்றும் 17 வயது சிறுமி ஆகியோர் இந்த கொலை சமவம் காரணமாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, இந்த மாதத்தின் துவக்கத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது உயிரிழந்த Amandeep Mickey Singh-ன் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஒரு தெருச்சண்டையால் அரங்கேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் முழு விசாரணைக்கு பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக 101 ref CAD 6386/1Dec221-ஐ தொடர்பு கொள்ளும் படியும், இது ரகசியமாக காக்கப்படும் எனவும் பொலிசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, 0800 555 111 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.