ரூ 5 லட்சம் கடனாக வாங்கிய பணத்தில் உருவாக்கிய நிறுவனம்... இன்று வருவாய் பல கோடிகள்
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தவரான ராஜ் நவ்னி, கடனாக வாங்கிய பணத்தில் உருவாக்கிய நிறுவனத்தால், இன்று பல கோடிகள் வருவாய் ஈட்டி வருகிறார்.
ஆயத்த ஆடைகள் கடை
மத்திய பிரதேசத்தின் தாமோவைச் சேர்ந்தவர் ராஜ் நவ்னி. 1995ல் ரூ 5 லட்சம் கடனாக வாங்கி Sorry Madam என்ற பெயரில் சிறிய ஆயத்த ஆடைகள் கடை ஒன்றை திறந்துள்ளார்.
இன்று இவரது நிறுவனம் வெளியிட்டுவரும் Nostrum என்ற பிராண்டுக்கு பிரபலங்கள் பலர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதுவே தற்போது ஆண்டுக்கு ரூ 150 கோடி வருவாய் ஈட்டுமளவுக்கு வளர்ந்துள்ளது.
உயிரியலில் பட்டம் பெற்ற பிறகு, ராஜ் தமது 23ம் வயதில் வணிக உலகில் நுழைந்துள்ளார். தமது தந்தையின் ஜவுளிக்கடையில் கற்ற அனுபவத்தை தமது புதிய தொழில் முயற்சியில் வெளிப்படுத்தினார்.
இவரது Sorry Madam என்ற கடை குறுகிய நாட்களிலேயே நகரில் பிரபலமானது. இதனையடுத்து தமது சிறிய கடையை Nostrum Fashion Private Limited என விரிவாக்கம் செய்தார்.
ரூ 500 கோடி வருவாய்
2023 மற்றும் 2024 நிதியாண்டில் சுமார் 150 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ 500 கோடி வருவாய் ஈட்டவேண்டும் என்பதே இலக்காக கொண்டுள்ளார்.
இவருடன் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை தற்போது 250 கடந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 1500 வணிக வளாகங்களில் இவரது Nostrum என்ற ஆயத்த ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |