நண்பர் கட்டாயப்படுத்தியதால் ரூ 50,000 முதலீடு செய்த நபர்.... இன்று அவரது சொத்து மதிப்பு ரூ 18,480 கோடி
நெருங்கிய நண்பர் ஒருவரின் கட்டாயத்தின் பேரில் வெறும் ரூ 50,000 முதலீட்டில் நிலம் ஒன்றை வாங்கியவர், இன்று மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்றின் உரிமையாளராக மாறியுள்ளார்.
வேளாண் குடும்ப பின்னணி
ஐதராபாத் நகரில் ஹோமியோபதி மருத்துவராக பயிற்சி எடுத்து வந்த போது தான், ஜூபல்லி ராமேஸ்வர ராவ் என்பவருக்கு அவரது நண்பர் அந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
ஆனால் அவருக்கு அப்போது அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை, பின்னாளில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்றை தாம் துவங்கவும் சிமெண்ட் மற்றும் எரிசக்தி துறைகளில் கோலோச்ச இருப்பதையும்.
தற்போதைய தெலுங்கானா மாகாணத்தில் மகபூப்நகர் மாவட்டத்தில் 1955ல் பிறந்தவர் ஜூபல்லி ராமேஸ்வர ராவ். மிக எளிமையான வேளாண் குடும்ப பின்னணி.
ஆனால், ஹோமியோபதி மருத்துவராக இருந்து கோடீஸ்வர தொழிலதிபராக மாற அவர் மேற்கொண்ட பயணம் புதிய தலைமுறைத் தொழில் முனைவோருக்கு ஒரு பாடமாகும்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்த ராவு, பள்ளிக்குச் செல்வதற்காக பொதுவாக பல கிலோமீற்றர்கள் நடந்து சென்றார். இளம் வயதிலேயே தந்தையை இழந்த பிறகு, தனது சூழ்நிலையை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக கல்வியைத் தொடர அவர் உறுதியாக இருந்தார்.
1974ல், மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில், ஹோமியோபதி படிப்பதற்காக ஐதராபாத் சென்றார். கல்லூரிப் பருவத்தில் மாணவர் தலைமைப் பணியில் ஈடுபட்டார். இதுவே ஒரு மதிப்புமிக்க உறவுப்பலத்தை உருவாக்க அவருக்கு உதவியது, அது பின்னர் அவரது வணிக முயற்சிகளில் அவருக்கு உதவியது.
ஐதராபாத் நாட்களில் தான் அவரது வாழ்க்கையை மொத்தமாக மாற்றவிருக்கும் அந்த முடிவை அவர் எடுத்துள்ளார். நண்பர் ஒருவர் கட்டாயப்படுத்த ரூ 50,000 முதலீடு செய்து நிலம் ஒன்றை வாங்கியுள்ளார்.
சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டொலர்
மூன்றாண்டுகளுக்கு பிறகு அந்த நிலத்தை 150,000 ரூபாய்க்கு விற்றுள்ளார். இதுவே, மருத்துவர் என்ற நிலையில் இருந்து தொழில்முனைவோராக அவரை மாற்ற காரணமானது.
1981ல் My Home என்ற கட்டுமான நிறிவனத்தை அவர் துவங்கினார். மிக விரைவிலேயே தென்னிந்தியாவின் முதன்மையான நிறுவனமாக மாறியது. கட்டுமான நிறுவனம் மட்டுமின்றி, Maha என சிமெண்ட் நிறுவனத்தையும் துவங்கினார்.
2008ல் Maha சிமெண்ட் நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகளை ரூ 1,429 கோடி தொகைக்கு ஐரிஷ் நிறுவனம் ஒன்றிற்கு விற்றார். 2013ல் ரூ 1,400 கோடிக்கு ஸ்ரீ ஜெயஜோதி சிமெண்ட்ஸ் நிறுவனத்தை வாங்கினார்.
இன்று, மஹா சிமெண்ட் 10 மில்லியன் டன்கள் உற்பத்தி திறன் கொண்ட தென்னிந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. 2024ல் வெளியான தரவுகளின் அடிப்படையில், மருத்துவர் ராவின் மொத்த சொத்து மதிப்பு என்பது சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்.
அதாவது இந்திய மதிப்பில் ரூ 18,480 கோடி. அன்று நண்பரின் கட்டாயத்தின் பேரில் நிலம் வாங்கியவர், இன்று அதன் மொத்த சூட்சுமங்களையும் அறிந்த பெரும் கோடீஸ்வரராக வலம் வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |