குழந்தையுடன் ட்ரக்கை திருடிச் சென்ற நபர்... இளம்பெண்ணும் நண்பர்களும் துணிச்சலாக எடுத்த நடவடிக்கை: திரைப்படத்தை மிஞ்சிய ஒரு சம்பவம்

By Balamanuvelan Jun 10, 2022 12:49 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவில் திடீரென ஒருவர் ட்ரக் ஒன்றை திருடிச் சென்ற நிலையில், இளம்பெண் ஒருவரும் அவரது நண்பர்களும் துணிச்சலாக அந்த நபரைத் துரத்திச் சென்று குழந்தையை மீட்க உதவியுள்ளார்கள்.

திரைப்படத்தை மிஞ்சும் வகையில் அமைந்த அந்த சம்பவம் பின்வருமாறு...

ஆல்பர்ட்டா மாகாணத்தில், நீண்ட தூரம் பயணித்துக்கொண்டிருந்த ஒரு குடும்பம், கால்கரிக்கு 50 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள Strathmore என்ற இடத்தில் அமைந்திருந்த ஒரு ஹொட்டலில் வாகனத்தை நிறுத்தியுள்ளது.

அந்த ட்ரக்கில் இருந்தவர்கள் இறங்கி, தங்களை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள, முகத்தை மறைத்திருந்த ஒரு நபர் சட்டென அந்த ட்ரக்கில் ஏறி அதை கிளப்பிக்கொண்டு போயிருக்கிறார். அந்தக் காரின் பின் சீட்டில் அவர்களுடைய கைக்குழந்தை இருந்திருக்கிறது.

அப்போது அதே ஹொட்டலுக்கு மற்றொரு கார் வந்திருக்கிறது. அதில், Tess Little Chief என்ற இளம்பெண், Kyle Royal, Lincoln Rodh மற்றும் அவர்களுடைய மற்றொரு நண்பர் ஆகிய நான்கு பேர் இருந்திருக்கிறார்கள். அவர்களது கார் கண்ணாடியைத் தட்டி தங்கள் குழந்தையுடன் ட்ரக்கை யாரோ திருடிச் செல்வதாகக் கூறி குழந்தையின் பெற்றோர் உதவி கோர, உடனே காரைக் கிளப்பியிருக்கிறார் Tess.

குழந்தை இருந்த கார் வேகமாக பறக்க, அதைப் பின் தொடர்ந்து Tessஇன் கார் பறக்க, கார் செல்லும்போதே நண்பர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். மொபைலை இயக்கத்திலேயே வைத்துக்கொண்டு ட்ரக்கை அவர்கள் துரத்த, சரியாக அவர்களது வழிகாட்டுதலின் பேரில் பொலிசார் வந்து சேர, பொலிசாரை துரத்த விட்டு விட்டு பின்னால் சென்றிருக்கிறார்கள் Tessம் நண்பர்களும். ஒரு கட்டத்தில் ட்ரக்கில் இருந்த நபர் பின் இருக்கையில் குழந்தை ஒன்று இருப்பதைக் கவனித்துள்ளார்.

குழந்தையுடன் ட்ரக்கை திருடிச் சென்ற நபர்... இளம்பெண்ணும் நண்பர்களும் துணிச்சலாக எடுத்த நடவடிக்கை: திரைப்படத்தை மிஞ்சிய ஒரு சம்பவம் | Man Stole Truck With Baby In Canada

Photo Credit: Tess Little Chief

உடனே சாலையோரமாக ட்ரக்கை நிறுத்தி குழந்தையை சாலையோரம் இறக்கி வைத்துவிட்டு மீண்டும் ட்ரக் பறந்திருக்கிறது. பொலிசார் சிலர் தங்கள் காரை நிறுத்தி குழந்தையை தூக்கியெடுத்து வைத்துக்கொண்டு அதன் பெற்றோருக்கு தகவலளிக்க, அவர்கள் வந்து சேர, குழந்தை பத்திரமாக அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ட்ரக்கை ஹெலிகொப்டர் உதவியுடன் தொடர்ந்து பொலிசார் துரத்த, ஓரிடத்தில் ஒரு கதவு குறுக்கிட, ட்ரக்கை நிறுத்திய அந்த நபர், ட்ரக்கிலிருந்து இறங்கி கால்நடையாக ஓட்டம் பிடிக்க, துரத்திச் சென்ற பொலிசார் வகையாக அவரை மடக்கிப் பிடித்துவிட்டார்கள்.

அவர் மீது குழந்தையைக் கடத்தியது, வாகனத்தைத் திருட முயன்றது, பொலிசாரிடமிருந்து தப்பியோடியது முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், குழந்தையைக் காப்பாற்றியதுடன், குற்றவாளியைப் பிடிக்க உதவிய Tess மற்றும் நண்பர்களை பொலிசார் பெரிதும் பாராட்டியுள்ளார்கள்.

பொதுவாக திருடப்பட்ட வாகனங்களை பொதுமக்கள் துரத்திச் செல்வதற்கு ஆதரவாக பொலிசார் ஆலோசனை அளிப்பதில்லை என்றாலும், இந்த விடயத்தில் ஒரு குழந்தை சம்பந்தப்பட்டிருப்பதால் Tess மற்றும் நண்பர்களுக்கு அவர்கள் தஙக்ள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US