மனைவி பிரிந்து செல்லவிரும்பியதால் இந்தியர் செய்த பயங்கர செயல்: நாடுகடத்த உத்தரவு
தன் மனைவி தன்னை விவாகரத்து செய்ய விரும்பியதால், அவரைத் தாக்கி, அவர் மீது காரை ஏற்றிய இந்தியர் ஒருவருக்கு இங்கிலாந்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனைவி பிரிந்து செல்லவிரும்பியதால் இந்தியர் செய்த பயங்கர செயல்
இங்கிலாந்திலுள்ள Tipton என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த வரிந்தர் சிங் (Varinder Singh, 28) என்னும் இந்தியரும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளார்கள்.
SWNS
விவாகரத்து செய்வது தொடர்பாக Bradfordஇலுள்ள ஷாப்பிங் சென்டர் ஒன்றின் சந்தித்துப் பேச இருவரும் முடிவு செய்துள்ளார்கள். அப்படி இருவரும் கார் பார்க்கிங்கில் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, சிங் தன் மனைவியின் மொபைலைப் பறித்துவைத்துக்கொண்டு திருப்பிக் கொடுக்க மறுத்துள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, சிங் தன் மனைவியைத் தாக்கி, கழுத்தை நெறிக்க, அவர் சுயநினைவிழந்து விழ, அவரைத் தூக்கி, காருக்குள் போட்டிருக்கிறார் சிங்.
சிறிது நேரத்தில் சுயநினைவு திரும்ப, அந்தப் பெண் காரிலிருந்து இறங்கி தப்பியோட, காரை இயக்கி, வேகமாகச் சென்று மனைவி மீது மோதியுள்ளார் சிங்.
இந்தக் காட்சிகள் அங்கிருந்த CCTV கமெராக்களில் பதிவாகியுள்ளன. நடந்ததைக் கண்ட சிலர் ஓடிச் சென்று சிங்கை மடக்கிப் பிடித்துவைத்துக்கொண்டு பொலிசாரை அழைத்துள்ளார்கள்.
ஆறு ஆண்டுகள் சிறை
இந்த வழக்கில் தற்போது சிங்குக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. CCTV காட்சிகளைப் பார்வையிட்ட பின் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிங் காரை இயக்கிய வேகத்தைப் பார்த்தால், கார் மோதியதில் அவரது மனைவி உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம்தான் என்று கூறியுள்ளார்.
நாடுகடத்த உத்தரவு
சிறைத்தண்டனை மட்டுமின்றி, இனி தன் வாழ்நாளில் சிங் தனது மனைவியை சந்திக்கவே கூடாது என அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஆறு ஆண்டுகளுக்கு வாகனங்கள் ஓட்டவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, சிறைத்தண்டனைக்குப் பின் சிங் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |