மனைவியின் அறுவைசிகிச்சை பிரசவம்: 5,000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த நபர்
மனைவியின் அறுவைசிகிச்சை பிரசவத்தை நேரில் பார்த்ததால் தமது மன நோய் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி மெல்போர்னில் உள்ள மருத்துவமனை மீது இழப்பீடு கேட்டு ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ராயல் மகளிர் மருத்துவமனை
மெல்போர்னில் உள்ள ராயல் மகளிர் மருத்துவமனை மீது சுமார் 5,000 கோடி இழப்பீடு கேட்டு அனில் கொப்புல என்ற அவுஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ராயல் மகளிர் மருத்துவமனையில் கடந்த 2018 ஜனவரி மாதம் அனில் கொப்புலவின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.
@kzenon
இந்த நிலையில் மனைவியின் அறுவைசிகிச்சை பிரசவத்தை நேரில் பார்க்க அனுமதித்ததன் மூலம் தொடர்புடைய மருத்துவமனை தமக்கு செய்ய வேண்டிய கடமையை மீறியதாக கொப்புலா தமது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் உளவியல் பாதிப்பை ஏற்பட்டதன் காரணமாக தனக்கு நஷ்டஈடு தர வேண்டியுள்ளதாக கொப்புலா தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, தமக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்பு காரணமாக தமது திருமண உறவே பாதிக்கப்பட்டது என்றார். ஆனால் ராயல் மகளிர் மருத்துவமனை எந்த விதி மீறலையும் முன்னெடுக்கவில்லை என விளக்கமளித்துள்ளது.
உளவியல் பாதிப்பு இல்லை
அனில் கொப்புலா 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்( சுமார் 5,342 கோடி) இழப்பீடு கேட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவ சோதனை முன்னெடுக்கப்பட்டது. அதில் இழப்பீடு அளிக்கும் வகையில், அவரது உளவியல் பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது.
ஆனால் அந்த மருத்துவ ஆய்வறிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார். இந்த நிலையில், தொடர்புடைய விவகாரத்தில் கொப்புலாவுக்கு எந்தவிதமான பொருளாதார நஷ்டமும் ஏற்படவில்லை என்பதாலும்,
அவரது நோய் கடுமையான பாதிப்பு என்று கருதப்படுவதற்கான வரம்பை அடையாததாலும், கொப்புலாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று நீதிபதி முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |