லண்டனில் வில் அம்புடன் மிரட்டல் விடுத்த நபர்: பொலிசார் சுட்டதில் பலி
லண்டனில், வீடு ஒன்றிலிருந்தவர்களை வில் அம்பு முதலான ஆயுதங்களுடன் மிரட்டிய நபர் பொலிசார் சுட்டதில் பலியானார்.
வில் அம்புடன் மிரட்டல் விடுத்த நபர்
தென்கிழக்கு லண்டனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசிப்பவர்களை, வில் அம்பு முதலான ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளார் ஒருவர்.
அந்த பகுதியில் நின்ற பொலிசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுள்ளனர். ஆனால், தங்களுக்கு ஆபத்து நேரிடலாம் என உணர்ந்த அவர்கள், மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
Pic: PA
அதைத் தொடர்ந்து, ஆயுதம் ஏந்திய பொலிசார் அங்கு வந்துள்ளனர். உடனே அந்த நபர் அந்த வீட்டுக்குள் சென்று மறைந்துகொண்டுள்ளார்.
பொலிசார் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பொலிசார் சுட்டதில் அவர் படுகாயமடைய, மருத்துவ உதவிக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
இந்த சம்பவத்தில், அந்த வீட்டிலிருந்த இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுடைய பெயர் முதலான எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |