எந்த நேரத்திலும் உன்னைக் கொன்றுவிடுவேன்! முன்னாள் மனைவி, அவரது கணவரை சுட்டுக்கொன்ற நபர்
அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நிபுணர், தனது முன்னாள் மனைவியை கொல்வதற்கு முன் கொடிய மிரட்டல்கள் விடுத்த புதிய ஆவணங்கள் வெளியாகியுள்ளன.
பல் மருத்துவரும், மனைவியும் கொலை
அமெரிக்காவின் ஓஹியோவில் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி மோனிக் டெபே (39) என்ற பெண்ணும், அவரது பல் மருத்துவர் கணவர் ஸ்பென்சர் டெபேயும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Facebook
இந்த கொடூரம் அரங்கேறிய சமயத்தில் தம்பதியரின் குழந்தைகளும் வீட்டில் இருந்துள்ளனர். நல்வாய்ப்பாக அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை.
மைக்கேல் மெக்கீ (39) என்ற நபர் அவர்களை கொலை செய்ததாக ஜனவரி 10ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அந்த நபர் மோனிக் டெபேயின் முன்னாள் கணவர் என்பது தெரிய வந்தது.
AP
அறுவை சிகிச்சை நிபுணரான மைக்கேல், தம்பதியரை கொலை செய்வதற்கு முன்பு அவர்களை மிரட்டி, துன்புறுத்தியதாக தெரிய வந்தது.
பகீர் மிரட்டல்கள்
இந்த நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் மைக்கேல் தனது முன்னாள் மனைவிக்கு பகீர் மிரட்டல்கள் விடுத்தது தெரிய வந்துள்ளது.
WSXY
அவர் மோனிக்கிடம், 'எந்த நேரத்திலும் உன்னைக் கொன்றுவிடுவேன், உன்னைக் கண்டுபிடித்து, உன் வீட்டிற்கு அடுத்த வீட்டையே வாங்கிவிடுவேன், நீ எப்போதும் என் மனைவியாகத்தான் இருப்பாய்' என்று கூறியிருந்தார் என சாட்சி ஒருவர் துப்பறியும் அதிகாரிகளிடம் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ABC 7-யின்படி, புதன்கிழமை வெளியான நீதிமன்ற ஆவணங்கள், 2015யில் அவர்கள் திருமணம் செய்துகொண்டதில் இருந்து 2017யில் விவாகரத்து செய்த பிறகும் கூட, மைக்கேல் தன்னைத் துன்புறுத்தியதாகவும், பலமுறை தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் மோனிக் தனது நண்பர்களிடம் கூறியிருந்ததை வெளிப்படுத்தியுள்ளன.
WIFR

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |