ப்ளோரிடா விமான நிலையத்தில் கனேடியரின் பையில் இருந்த மர்ம பொருள்... பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Canada airport florida
By Balamanuvelan Jul 14, 2021 08:55 AM GMT
Report

ப்ளோரிடா விமான நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர், தன் பையில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக கூறியதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரொரன்றோவைச் சேர்ந்த Wegal Rosen (74), கனடா திரும்புவதற்காக Fort Lauderdale விமான நிலையத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அவர் தன்னுடைய பையில் ஒரு வெடிகுண்டு இருப்பதாகக் கூற, உடனே அங்கு குவிந்த பொலிசார், மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியதுடன், விமான நிலையம் நோக்கிவரும் போக்குவரத்தையும் தடை செய்தனர். எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட, 50 விமானங்கள் புறப்பாடு தாமதமாயிற்று.

பின்னர் Rosenஐக் கைது செய்த பொலிசார், அவரது பையை கவனமாக சோதனையிட்டபோது அதற்குள் இருந்தது... CPAP என்னும் மருத்துவ உபகரணம்.

ப்ளோரிடா விமான நிலையத்தில் கனேடியரின் பையில் இருந்த மர்ம பொருள்... பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Man Threatens Air Canada Agent At Florida Airport

Rosenக்கு, sleep apnea என்னும் தூங்கும்போது மூச்சுவிடுதல் தடைபடும் பிரச்சினை இருந்திருக்கிறது. அதற்கான சிகிச்சைக்கான CPAP என்னும் மருத்துவ உபகரணத்தைத்தான் அவர் தன் பையில் வைத்திருந்திருக்கிறார்.

தனது லக்கேஜை சோதனையிடுவதற்கு பெரும் தொகை செலுத்தவெண்டியிருந்ததாலும், இதய நோய் நிபுணர் ஒருவரை சந்திக்க கனடா திரும்ப தாமதமாகிக்கொண்டிருந்ததாலும் மன அழுத்தத்திற்குள்ளான Rosen, எரிச்சலில் தன் பையில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிவிட, விமான நிலையமே அல்லோலகல்லோலப்பட்டுவிட்டிருக்கிறது.

வெடிகுண்டு இருப்பதாக பொய் சொன்ன Rosenஆல் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் 15 ஆண்டுகள் சிறையில் செலவிட நேரிடும். அத்துடன், 10,000 அமெரிக்க டொலர்கள் அபராதமும் அவர் செலுத்தவேண்டியிருக்கும்.

20,000 அமெரிக்க டொலர்கள் ஜாமீனில் அவரை விட சம்மதித்த நீதிபதி, கண்டிப்பாக அவர் மீண்டும் Fort Lauderdale விமான நிலையம் வழியாக ரொரன்றோவுக்கு செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்! 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US