லண்டன் இரயிலில் ஆசிய பெண்ணை நோக்கி இனவெறி வார்த்தைகளை பேசி தாக்க முயன்ற ஆணுக்கு நேர்ந்த நிலை! வீடியோ
லண்டன் சுரங்க இரயிலில் ஆசிய பெண்ணை தாக்க முயன்ற நபரை சக பயணிகள் அடித்த வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் இரயிலுக்குள் நின்றிருந்த ஆசிய பெண்ணை நோக்கி ஆண் ஒருவர் இனவெறியை தூண்டும் வகையில் பேசினார்.
ஒருகட்டத்தில் அப்பெண் அருகே சென்ற அந்த ஆண் அவரை அடிக்க முயன்றார்.
இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர், பின்னர் அவர்கள் ஒன்றுகூடி அந்த நபரை அடித்து துவைத்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்களா இல்லையா என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.