இரு சிறுமிகளுடன் ஒரே நேரத்தில் திருமணம்! அழைப்பிதழைக் கண்டு அதிர்ச்சி..உடனடியாக நிறுத்திய பொலிஸ்
இந்திய மாநிலம் ஆந்திராவில் இளைஞர் ஒருவருக்கு சிறுமிகளுடன் நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
ஆந்திராவின் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளது. குறித்த இளைஞர், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணக்க முயன்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று திருமணம் நடைபெறுவதாக அழைப்பிதழ் மூலம் பொலிஸாருக்கு தெரிய வந்தது.
உடனே அவர்கள் விசாரித்தபோது, மணப்பெண்கள் இருவருமே சிறுமிகள் என்றும் தெரியவர திருமணத்தை நிறுத்தினர். எனினும் இருவீட்டாரும் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திருமணம் சட்டப்படி தவறு என்றும், மீறினால் நடவடிக்கை எடுப்போம் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டு குடும்பங்களும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |