மகாராணி இறக்கும் திகதியை 3 மாதங்கள் முன்னரே கணித்தது எப்படி? உலகளவில் பிரபலமான நபரின் குட்டு வெளியானது
பிரித்தானிய ராணி மரண திகதியை முன்னரே கணித்து டுவிட்டரில் பதிவிட்ட நபரின் அதை எப்படி செய்தார் என தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மாற்றி மாற்றி ஒரு திகதியை அவர் குறிப்பிட்டு வந்ததில் அதில் ஒரு திகதியில் உண்மையிலேயே ராணி இறந்துள்ளார்.
பிரித்தானிய மகாராணியின் மரணத்தை முன்னரே கணித்த டுவிட்டர் பயனர் ஒருவரின் பதிவுகளை யாரும் தற்போது பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள சூழலில் அவர் எப்படி அதை கணித்திருப்பார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
logan_smith526 என்ற ஐடியை டுவிட்டரில் கொண்ட நபர் கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி டுவிட்டரில் வெளியிட்டிருந்த பதிவில், மகாராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8, 2022 உயிரிழப்பார் என தெரிவித்திருந்தார்.
லோகன் ஸ்மித் பதிவிட்டதை போலவே அரச குடும்ப உறுப்பினர்களால் சூழப்பட்ட நிலையில் பிரித்தானிய மகாராணி கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 8) உயிரிழந்தார், மேலும் லோகன் குறிப்பிட்ட திகதியும் துரதிர்ஷ்டவசமாக உண்மையாகியது.
ராணி குறித்து லோகன் ஸ்மித் பதிவிட்டு இருந்த அதே பதிவில், பிரித்தானியாவின் புதிய மன்னர் சார்லஸ் மார்ச் 28, 2026 அன்று இறந்துவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
எப்படி லோகன், மகாராணி மரண திகதியை முன்னரே கணித்தார் என்ற விவாதம் டுவிட்டரில் எழுந்தது. இது ஜோதிடமா அல்லது ஆருடமா என பலரும் குழம்பினர். மேலும் இதன் மூலம் அந்த ஐடியும், லோகன் என்ற நபரும் உலகளவில் பிரபலமானார், அவரின் அந்த பதிவு டுவிட்டரால் நீக்கப்பட்டது.
இந்த நிலையில் logan_smith526 ஐடியில் உள்ள பதிவுகளை தற்போது யாரும் பார்க்க முடியாத வண்ணம் பூட்டு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக @_MyMode வெளியிட்ட பதிவில், லோகன் (logan_smith526) இதே போல கடந்த ஜனவரி மாதம் ஒரு பதிவை போட்டுள்ளார், அதில் எலிசபெத் மகாராணி இந்தாண்டு பிப்ரவரி 13ஆம் திகதி இறப்பார் என பதிவிட்டிருந்தார்.
அதாவது லோகன் ஒவ்வொரு மாதமும் எதிர்காலத்திற்காக அதிக எண்ணிக்கையிலான ட்வீட்கள் எழுதி வந்திருக்கிறார். அதில் எதாவது தற்செயலாக நடக்கும்போது தான் சொன்னது நடந்துவிட்டதாக கூறி போலித்தனமாக பிரபலமாக முயன்றுள்ளார்.
பின்னர் தான் சொன்னது நடக்காத பதிவுகளை அழித்து விடுகிறார். இதுபோல போலியாக எலிசபெத் மகாராணி இறப்பு குறித்து அடிக்கடி பதிவிட்டு வந்திருக்கிறார். அதில் அவர் சொன்ன ஒரு திகதியில் உண்மையிலேயே மகாராணி இறந்திருக்கிறார்.
இதையடுத்து முன்னர் சொன்ன பதிவுகளை அவர் அழித்திருக்கிறார். அதில் ஒரு பதிவின் ஸ்கிரீன் ஷாட் தான் இது என ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார், இதே போல பலரும் அந்த லோகன் ஐடி தான் சொன்னது உண்மையாக நடக்காத பதிவுகளை அவர் அழித்திவிடுவார் என ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளனர்.
Very easy, before every month a large number of tweets are written for the future and the excitement is set to spread when it happens by chance, then all the wrong predictions are deleted, and we easily get fame from the “dupes”.?@Logan_Smith526 #QueenElizabeth pic.twitter.com/hzbkEJJsrU
— مُمَيّز (@_MyMode) September 8, 2022
Scam! He made a lot of ‘predictions’ and made them private. He deleted the rest pic.twitter.com/2r92iM21cu
— Respek Cybersleuth! (@kgosikoena) September 8, 2022