பிரித்தானியாவில் அமெரிக்க தேசிய கொடி எரிப்பு! போராட்டத்தில் குதித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்: எதற்காக?
பிரித்தானியாவில் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்ட ‘ஐரோப்பியன் சூப்பர் லீக்’ கால்பந்து தொடருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மான்செஸ்டர் யுனைடெட் அணி ரசிகர்கள், அமெரிக்க தேசிய எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏப்ரல் 18 அன்று, இங்கிலிஷ் பிரீமியர் லீக் அணிகள் உட்பட முக்கிய ஐரோப்பிய கிளப்புகள் ‘ஐரோப்பியன் சூப்பர் லீக்’ என்ற புதிய போட்டியை உருவாக்குவதாக அறிவித்தன.
இதற்கு கால்பந்து உலகில் கடும் கண்டனம் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஐரோப்பியன் சூப்பர் லீக் உருவாக்கும் முடிவு கைவிடப்பட்டது.
ஆனால், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் இதற்கு எதிரான கொந்தளிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, புதிய போட்டியை உருவாக்க திட்மிட்டு செயல்பட்ட கிளப்களின் உரிமையாளர்களுக்கு எதிராக ரசிகர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
ஏப்ரல் 24ம் திகதி அன்று Old Trafford-க்கு வெளியே குவிந்த 1000-க்கு மேற்பட்ட மான்செஸ்டர் யுனைடெட் அணி ரசிகர்கள், கிளப்பின் அமெரிக்க உரிமையாளரான Glazer குடும்பத்தை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
United fans burning an American flag outside Old Trafford today 🔰#GlazersOut pic.twitter.com/tWhnuV1Rgp
— UtdXclusive 🔰 (@UtdXclusive) April 24, 2021
‘Glazers Out’ என எழுதப்பட்ட பெரிய பதாகைகளுடன் குவிந்த ரசிகர்கள், கிளப் உரிமையாளர்களுககு எதிராக கோஷமிட்டனர். ஒரு கட்டத்தில் சில ரசிகர்கள் அமெரிக்க தேசிய கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சில தினங்களுக்கு முன் பயிற்சி மைதானத்திற்குள் யாரும் செல்ல முடியாத படி நுழைவு வாயில் முன் குவிந்த மான்செஸ்டர் யுனைடெட் அணி ரசிகர்கள், Glazers குடும்பத்திற்கு எதிரான கோஷமிட்டு போராடத்தில் ஈடுபட்டனர்.