அபராதமாக பெருந்தொகையை எதிர்கொள்ளும் இளம் பிரித்தானிய கால்பந்து நட்சத்திரம்
இங்கிலாந்து தேசிய அணி மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணி கால்பந்து நட்சத்திரமான Marcus Rashford தமது இரண்டு வார சம்பளத்தை அபராதமாக செலுத்த நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இரவு விடுதி கொண்டாட்டங்களில்
மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகத்திடம் உண்மையை மறைத்து இரவு விடுதி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளதுடன், பயிற்சி அமர்வுகளுக்கும் அவர் பங்கேற்கவில்லை.
@reuters
இதனையடுத்து Marcus Rashford மீது ஒழுங்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்ற தகவல் மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது தனது இரண்டு வார சம்பளமான 650,000 பவுண்டுகள் தொகையை அவர் அபராதமாக செலுத்த நேரிடும் என்று கூறப்படுகிறது. உடம்பு சரியில்லை என்று குறிப்பிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அவர் பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை.
வாரத்திற்கு 325,000 பவுண்டுகள் சம்பளம்
மட்டுமின்றி, Newport County-யில் 4-2 கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வென்ற ஆட்டத்திலும் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் விளையாடவில்லை. ஆனால் மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கையில், இது எங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனை, நாங்களே தீர்த்துக்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளனர்.
@getty
வாரத்திற்கு 325,000 பவுண்டுகள் சம்பளம் பெறும் ராஷ்ஃபோர்ட் தமது நண்பரை சந்திக்கும் பொருட்டு புதன்கிழமை Belfast பயணித்துள்ளார். அதன் பின்னர் வியாழக்கிழமை இரவு விடுதி ஒன்றில் காணப்பட்டுள்ளார்.
அணி நிர்வாகத்திடம் உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு, இரண்டு இரவுகள் தொடர்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |