மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க திட்டமிட்ட லிபியாவின் கடாபி: வெளிவராத தகவல்
சிவப்பு பிசாசுகள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க லிபியாவின் கடாபி உட்பட நான்கு பிரபலங்கள் முயற்சி மேற்கொண்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் அணி விற்பனை
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்களான கிளேசர் குடும்பம் புதிய முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு வரும் நிலையில், இந்த கால்பந்தாட்ட தொடர் முடிவடைவதன் முன்னர் சிலவேளை மான்செஸ்டர் யுனைடெட் அணி விற்கபட்டாலும் வியப்பதற்கில்லை என கூறுகின்றனர்.
@getty
இதனிடையே, பிரித்தானிய செல்வந்தரான சர் ஜிம் ராட்க்ளிஃப், அணியை வாங்குவதற்கான முயற்சியில் இருப்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார். சிவப்பு பிசாசுகள் அணியை சர் ஜிம் ராட்க்ளிஃப் மட்டுமல்ல, இதற்கு முன்னர் நான்கு முக்கிய நபர்களும் வாங்குவதற்கு பெரும் முயற்சி எடுத்துள்ளனர்.
1984ல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், உளவாளி என சந்தேகிக்கப்படுபவருமான ராபர்ட் மேக்ஸ்வெல் ஒருமுறை முயற்சி மேற்கொண்டுள்ளார். இவருக்கு சொந்தமாக Thames Valley Royals என்ற கால்பந்து அணியும் உள்ளது.
பிரித்தானிய தொழிலதிபர்
ஆனால் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் அப்போதைய தலைவரை சந்தித்து, அணியின் விலையை உறுதி செய்ய இவர் தவறியதாக கூறப்படுகிறது. 1980களில் மைக்கேல் நைட்டன் என்ற பிரித்தானிய தொழிலதிபர் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.
mage: Maiman Rick
மட்டுமின்றி, 1989ல் பெரும்பாலான பங்குகளை கைப்பற்றும் நிலையிலும் இருந்துள்ளார், ஆனால் இறுதி கட்டத்தில் முடியாமல் போயுள்ளது. மூன்றாவதாக அமெரிக்க தொழிலதிபரான ரூபர்ட் முர்டோக் 623.4 மில்லியன் பவுண்டுகளுக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க காய் நகர்த்தியுள்ளார்.
அணியின் உரிமையாளர்களும் ஒப்புக்கொண்டு இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில் துறையால் தடுக்கப்பட்டது. தேவையற்ற தொழில் போட்டியை இந்த முடிவு ஊக்குவிக்கும் என காரணமும் தெரிவிக்கப்பட்டது.
லிபியாவின் கடாபி
இதனால் ரூபர்ட் முர்டோக் தமது முயற்சியை கைவிடும் நிலை ஏற்பட்டது. 2004ல் எவரும் எதிர்பாராத வகையில், கிளேசர் குடும்பம் தற்போதைய சிவப்பு பிசாசுகள் அணியை வாங்கும் ஓராண்டுக்கு முன்னர், லிபியாவின் கடாபி மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க காய் நகர்த்தியுள்ளார்.
@getty
அப்போது மான்செஸ்டர் யுனைடெட் அணியின் 39.9% பங்குகள் John Magnier மற்றும் JP McManus ஆகியோரிடம் இருந்தது. ஆனால் தற்போதும் புதிராகவே உள்ளதாம், கடாபி வாங்க முடிவு செய்து அனைத்து ஆவணங்களும் தயாரான நிலையில்,
எப்படி அந்த ஒப்பந்தம் ரத்தானது என்பது என்கிறார் கிளேசர் குடும்பம் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க தரகராக செயல்பட்ட Mehmet Dalman.
வெறும் சில மணி நேரங்களில் அனைத்தும் தலைகீழாக மாறியதை கண்கூடாக கண்டேன் என்கிறார் அவர்.