ரொனால்டோவின் பெயர் கொண்ட உள்ளாடையை அணிந்திருந்த வீரர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர் கார்னாச்சோ போர்த்துக்கல் வீரர் ரொனால்டோவின் பெயர் கொண்ட உள்ளாடையை அணிந்திருந்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அலெஜாண்ட்ரோ கர்னாச்சோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகிய பின்னர், ஒரு வழியாக சவூதி அரேபியாவின் கிளப் அணியான அல் நஸர் அணியில் இணைந்தார்.
முன்னதாக, அவருடன் மான்செஸ்டர் அணியில் விளையாடிய இளம் வீரர் அலெஜாண்ட்ரோ கர்னாச்சோ நேற்று நடந்த எவெர்ட்டன் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார்.
@Reuters
CR7 உள்ளாடை
அப்போது அவர் தனது டி-ஷர்ட்டை உயர்த்தி ஆடைகளை சரிசெய்தபோது CR7 பிராண்டட் உள்ளாடையை அவர் அணிந்திருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
@Getty
கர்னாச்சோவுக்கு மிகவும் பிடித்த கால்பந்து வீரர்களில் ரொனால்டோவும் ஒருவர் ஆவார். கடந்த ஆண்டு அவர் கிளப்பில் இருந்து வெளியேறியபோதிலும் கர்னாச்சோவுக்கு அவர் மீதான அபிமானம் குறையவில்லை என்பதை இது காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முதன் முதலில் ரொனால்டோவுடன் இணைந்து விளையாடியபோது கர்னாச்சோ அளவுகடந்த மகிழ்ச்சியடைந்தார். இந்த நிலையில் அவர் இன்னும் ரொனால்டோவின் ரசிகராக இருப்பதாக சிலாகிக்கும் ரசிகர்கள், கர்னாச்சோ CR7 உள்ளாடையை அணிந்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
(Image: Tom Purslow/Manchester United via Getty Images)