வாரத்திற்கு 50,000 பவுண்டுகள் சம்பளம் வாங்கிய கால்பந்து பிரபலம் திவாலானதாக அறிவிப்பு
முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் அணி கால்பந்து பிரபலம் தாம் திவாலான கதையின் பின்னணியை வெளிப்படுத்தியுள்ளார்.
வாரத்திற்கு 50,000 பவுண்டுகள்
தற்போது 44 வயதாகும் Wes Brown நீண்ட 15 ஆண்டுகள் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக களமிறங்கியுள்ளார். ஒருகட்டத்தில் வாரத்திற்கு 50,000 பவுண்டுகள் வரையில் சம்பளமாகவும் பெற்றுள்ளார்.
Cheshire பகுதியில் முன்னர் சொத்துக்களும் வாங்கியிருந்தார். தற்போது அவை 4.5 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஐந்து முறை பிரீமியர் லீக் வெற்றியாளரான Wes Brown தனது முழு சொத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 2023 பிப்ரவரி மாதம் திவாலானதாக அறிவிக்க விண்ணப்பித்துள்ளார். திருமணம் முடித்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் தமது மனைவியை விவாகரத்து செய்த ஓராண்டுக்கு பின்னரே, திவாலானதாக அறிவிக்க விண்ணப்பித்தார்.
சரியானவர்களாக இருக்க வேண்டும்
தமது இந்த இக்கட்டான நிலைக்கு காரணம் கூடா நட்பு என்றே Wes Brown தெரிவித்துள்ளார். 1999 மற்றும் 2008ல் மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் சேம்பியன்ஸ் லீக் பக்கம் வென்றார்.
Sunderland, Blackburn மற்றும் Kerala Blasters கால்பந்து அணிகளுடனும் களம் கண்டுள்ளார். வாழ்க்கையின் அதிர்ஷ்டமான நாட்களில் பணம் அதிகம் சம்பாதிக்கும் போது உங்களுடன் இருக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் சரியானவர்களாக இருக்க வேண்டும் என்றும்,
அப்படியான வாய்ப்பு தமக்கு அமையவில்லை என்றே Wes Brown குறிப்பிட்டுள்ளார். அதுவே தமது தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |