முடிவுக்கு வரும் ஒப்பந்தம்... மார்கஸ் ராஷ்ஃபோர்டுக்கு விலை குறித்த மான்செஸ்டர் யுனைடெட்
சிவப்பு பேய்கள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஹிட்மேன் மார்கஸ் ராஷ்ஃபோர்டுக்கு விலை குறித்துள்ளது மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம்.
ஹிட்மேன் மார்கஸ் ராஷ்ஃபோர்டு
கிளேசர்ஸ் குடும்பம் மான்செஸ்டர் யுனைடெட் அணியை கைமாற்ற முடிவு செய்துள்ள நிலையில், சிவப்பு பேய்களின் ஹிட்மேன் என கொண்டாடப்படும் 25 வயதான மார்கஸ் ராஷ்ஃபோர்டுக்கு 120 மில்லியன் பவுண்டுகள் விலை குறித்துள்ளது மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம்.
மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வர இன்னும் 16 மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில், வாரத்திற்கு 300,000 பவுண்டுகள் என்ற புதிய ஒப்பந்தம் ஒன்றை ராஷ்போர்டு மேற்கொள்வார் என்ற தகவலும் கசிந்துள்ளது.
ஆனால் ராஷ்போர்டை தங்கள் பக்கம் இழுக்கும் முனைப்பில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் மற்றும் ரியல் மாட்ரிட் அணி நிர்வாகங்களும் களத்தில் உள்ளன. பார்சிலோனா அணி நிர்வாகமும் ஒவ்வொரு நகர்வுகளையும் கவனித்து வருவதாக கூறியுள்ளனர்.
உலகக் கோப்பை கால்பந்து வேளையில் ராஷ்போர்டுக்கான மதிப்பு 80 மில்லியன் பவுண்டுகள் என அறிவித்திருந்தது.
ஆனால் கத்தார் கால்பந்து திருவிழா முடிவடைந்த பின்னர் ராஷ்ஃபோர்ட் அனைத்து ஆட்டங்களிலும் அதிரடி காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.