ஐரோப்பாவிலேயே பிரம்மாண்ட மைதானத்தை கட்டும் இங்கிலாந்து! 2 பில்லியன் பவுண்டு திட்டம்
இங்கிலாந்தில் ஓல்ட் டிராஃப்போர்டுக்கு பதிலாக மான்செஸ்டர் யுனைடெட் பிரம்மாண்ட மைதானம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.
மிகப்பெரிய மைதானம்
ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் உள்ள Camp Nou எனும் மைதானம் தான் மிகப்பெரியதாகும்.
இதன் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 1,05,000 ஆகும். இதற்கு அடுத்தபடியாக, லண்டனின் Wembley மைதானம் (90,652 இருக்கைகள்) இரண்டாவது இடத்தில் உள்ளது.
2030க்குள் முடிக்கப்படும்
இந்த நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் 1,00,000 இருக்கைகள் கொண்ட ஓல்ட் டிராஃப்போர்டுக்கு பதிலாக புதிய பிரம்மாண்ட மைதானத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்த மைதானத்தை அமைக்க 2 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என்றும், இந்த திட்டமானது ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டு 2030க்குள் முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், ஓல்டு டிராஃப்போர்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது மறுவடிவமைப்பதா என்பது குறித்து யுனைடெட் இன்னும் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |