மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு கிடைத்த பேரிடி: 11 ஆண்டுகளில் முதல் முறை
மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக சீசன் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐந்து சதவீத கட்டண உயர்வு
வயது வந்தோருக்கான சீசன் டிக்கெட்டுகளுக்கான ஐந்து சதவீத கட்டண உயர்வுக்கு ரசிகர்கள் ஆவேசமாக அணி நிர்வாகத்தை கண்டித்துள்ளனர். இதே வேளை, அர்செனல் அணி நிர்வாகமும் 2023-24க்கான சீசன் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது.
ஆனால், இதர செலவுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணி பங்கு விலைகள் கடந்த வாரம் ஒரே நாளில் 334 மில்லியன் பவுண்டுகள் உயர்ந்திருந்த போதிலும், சீசன் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
@getty
மேலும், விலைவாசி உயர்வால் தங்கள் அணி ரசிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை தங்களால் புரிந்துகொள்ள முடியும் எனவும், அதனாலையே விலை உயர்வை தற்போதைய பணவீக்க விகிதத்தை விட குறைவாக வைத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
அணி நிர்வாகம் ஒட்டுண்ணிகள்
ஆனால் இந்த விளக்கம் ஒன்றும் ரசிகர்களை அமைதிப்படுத்தவில்லை, அவர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அணி நிர்வாகம் ஒட்டுண்ணிகள் என ஒருவர் குறிப்பிட,
கட்டண உயர்வை பார்க்கும் போது கிளேசர்ஸ் குடும்பம் மான்செஸ்டர் யுனைடெட் அணியை விற்கும் முடிவுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது என்றார் இன்னொருவர்.