திடீரென்று பின்வாங்கிய மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம்: ரசிகர்களை நாட முடிவு
மான்செஸ்டர் யுனைடெட் அணி விற்பனை செய்யப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்குவதாக அதிரடியா அறிவித்துள்ளனர்.
அத்துடன், அணிக்கு தேவையான நிதியை திரட்ட அவர்களின் சர்வதேச ரசிகர்கள் தரப்பை நாடவும் முடிவு செய்துள்ளது கிளாசர் குடும்பம். ரசிகர்களால் சிவப்பு பேய்கள் என கொண்டாடப்படும் மான்செஸ்டர் யுனைடெட் அணியை விற்பனைக்கு வைத்திருந்தனர்.
@AFP
இதில் கத்தார் கோடீஸ்வரர் Sheikh Jassim மற்றும் Sir Jim Ratcliffe ஆகியோரை சந்தித்து ஒப்பந்தம் மேற்கொள்ளவும் கிளாசர் குடும்பம் தயாராகி வந்தது. மட்டுமின்றி, கத்தார் கோடீஸ்வரர் Sheikh Jassim அணியை மொத்தமாக வாங்கவும் தயார் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் 246 பில்லியன் பவுண்டுகள் சொத்துமதிப்பு கொண்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று, நிதியுதவி செய்ய தயார் என கிளாசர் குடும்பத்தை அணுகியுள்ளது.
அவர்களால் டிஜிட்டல் விற்பனை, வீடியோ கேமிங், வணிக உரிமம் உள்ளிட்டவையில் இருந்து வருவாய் ஈட்ட முடியும் எனவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களாலையே, தற்போது கிளாசர் குடும்பம் அணியை மொத்தமாக விற்பனை செய்வதில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது.