படுக்கையில் தூங்கி எழுந்த போது தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த நபர்! அடுத்து தெரியவந்த ஒரு உண்மை
அவுஸ்திரேலியாவில் வீட்டில் தூங்கி எழுந்த போது தன்னை பாம்பு கடித்தது என்பதை உணர்ந்து நபர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார்.
பீட்டர் ஜஸ்சிவஸ்கி என்ற நபர் தன்னை பாம்பு சீண்டிய திக் திக் அனுபவத்தை அனுபவித்துள்ளார். பீட்டர் சமீபத்தில் காலையில் தனது படுக்கையில் இருந்து தூங்கி எழுந்தார்.
அப்போது அவரின் இடது கை பெரிதாக வீங்கியிருந்தது, வலியாலும் பீட்டர் துடித்த போது அந்த வழியாக red-bellied black வகை பாம்பு செல்வதை கண்டார், அது தான் தன்னை கடித்தது என்பதை புரிந்து கொண்டார்.
தூக்கத்தில் இருந்து கண்விழிக்கும் வரையில் தான் பாம்பு கடிபட்டதை உணராமல் இருந்ததை பீட்டர் புரிந்து கொண்டார்.
பின்னர் உடனடியாக அங்கிருந்து கிளம்பி மருத்துவமனைக்கு சென்ற நிலையில் தற்போது பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறார்.
அவரை கடித்த red-bellied black பாம்பு மற்ற பாம்புகளை விட விஷத்தன்மை குறைவாக கொண்டது என தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் அந்த வகை பாம்புகள் அதிகம் காணப்படுகின்றன.
நாட்டில் red-bellied black பாம்புகள் கடித்ததன் விளைவாக மனித இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.