லண்டன் விமானநிலையத்தில் தடுப்பை தாண்டி ஓடிய நபர்! அடுத்து செய்ததை பாருங்க.. கொண்டாட்ட வீடியோ
லண்டன் விமான நிலையத்தில் நண்பரை வரவேற்று நடனம் ஆடிய நபர்.
பல ஆயிரம் பார்வையாளர்களை பெற்று வைரலாகும் வீடியோ.
லண்டன் விமான நிலையத்தில் தடுப்பை தாண்டி சென்று நபர் ஒருவர் நண்பரை வரவேற்று நடனம் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது.
Heathrow விமான நிலையத்தில் இது தொடர்பான வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில், விமானத்தில் நபர் ஒருவர் வந்து இறங்கினார். இதையடுத்து விமான நிலையத்தில் அவருக்காக நண்பர் காத்திருந்தார்.
இறங்கியவரை நீண்ட காலத்திற்கு பின் பார்த்ததில் உற்சாகமடைந்த சிங் நண்பர், தடுப்பை தாண்டி சென்று ஓடி போய் அவரை கட்டி பிடித்து கொண்டாடி மகிழ்ந்தார்.
This has to be one of the most legendary welcomes at Heathrow Airport pic.twitter.com/Wr9JbRv3Qg
— UB1UB2 Southall (@UB1UB2) October 21, 2022
பின்னர் இருவரும் அவர்களின் பாரம்பரிய நடனமான பாங்கரா நடனம் ஆடினார்கள். Heathrow விமான நிலையத்தில் இது மிகவும் புகழ்பெற்ற வரவேற்புகளில் ஒன்றாக இருக்கும் என்ற கேப்ஷனுடன் டுவிட்டரில் இது தொடர்பான வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது.
இதுவல்லவா நட்பு என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.