வெறும் 10 வருடங்களில்... முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நபர்

TikTok China
By Arbin Feb 26, 2026 11:03 PM GMT
Report

சீனாவில் ஒருவர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸை விடப் பெரிய நிறுவனத்தை உருவாக்கி 42 வயதில் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

மைக்ரோசாப்ட் உட்பட

இவரது இந்த சாதனை அனைத்தும் வெறும் 10 வருடங்களில் நிகழ்ந்துள்ளது என்பதே வியக்க வைக்கிறது. சர்வதேச அளவில் பிரபலமான TikTok செயலியை உருவாக்கியுள்ள ByteDance என்ற நிறுவனத்தின் நிறுவனர்களில் முதன்மையானவர் Zhang Yiming.

வெறும் 10 வருடங்களில்... முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நபர் | Man Who Built Bigger Than Reliance

இன்று ByteDance நிறுவனத்தின் சந்தை மதிப்பு 330 பில்லியன் டொலர். இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 245 பில்லியன் டொலர்.

சீனாவின் புஜியன் மாகாணத்தில் பிறந்த யிமிங், நான்கை பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியலில் பட்டம் பெற்றவர். அவர் தனது முதல் நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் உட்பட பிரபலமான சில நிறுவனங்களில் வேலை செய்துள்ளார்.

இந்த நிலையில், கட்டுமான நிறுவனங்கள் தொடர்பில், குடியிருப்புகள் மற்றும் கட்டுமானங்களில் தேடுபொறியான 99fang என்ற இணைய பக்கத்தை உருவாக்கி செயலுக்கு கொண்டுவந்தார்.

பிரித்தானிய அரச குடும்பத்திற்கு அடுத்த நெருக்கடி... ஆண்ட்ரூ விவகாரத்தை விசாரிக்க FBI மீது அழுத்தம்

பிரித்தானிய அரச குடும்பத்திற்கு அடுத்த நெருக்கடி... ஆண்ட்ரூ விவகாரத்தை விசாரிக்க FBI மீது அழுத்தம்

அடுத்த முயற்சியாக 2012ல் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து ByteDance நிறுவனத்தை தொடங்கினார்.

2016ல் காணொளிகளைப் பகிரும் Douyin என்ற செயலியை சீனாவில் வெளியிட்டார். 2017ல் அதன் சர்வதேச பதிப்பாக TikTok செயலியை வெளியிட்டார்.

அதன் பின்னரே ByteDance நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயரத் தொடங்கியது. அத்துடன், உலகளவில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட டிக்டோக் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றாக மாறியது.

வெறும் 10 வருடங்களில்... முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நபர் | Man Who Built Bigger Than Reliance

இரண்டாவது பெரிய

இதன் காரணமாக, ஃபோர்ப்ஸ் சீனாவின் 30 வயதுக்குட்பட்ட 30 பேர்கள் பட்டியலிலும், பார்ச்சூன் பத்திரிகையின் 40 வயதுக்குட்பட்ட 40 பேர்கள் பட்டியலிலும், டைம் பத்திரிகையின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் போன்ற புகழ்பெற்ற வணிகப் பட்டியல்களில் யிமிங் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்.

2021ல் ByteDance நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார். இருப்பினும் குறிப்பிடத்தக்க பங்குகளை தன் வசம் வைத்திருக்கும் யிமிங், தமது நிறுவன நிர்வாகத்தில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்களிக்கும் உரிமையையும் வைத்துள்ளார்.

வெறும் 10 வருடங்களில்... முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நபர் | Man Who Built Bigger Than Reliance

சீனாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக அறியப்படும் யிமிங், தற்போது உலக பணக்காரர்கள் வரிசையிலும் இடம்பெற்றுள்ளார்.

அவரது சொத்து மதிப்பு 65 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், உலகின் 27வது பணக்காரராக யிமிங் அறியப்படுகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US