எதுவும் செய்யாமலே நாளுக்கு சுமார் ரூ 92 கோடி சம்பாதிக்கும் நபர்... உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர்
ஒரு காலத்தில் உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பில் கேட்ஸ் தற்போதும் தினசரி கோடிகள் வருவாய் ஈட்டி வருகிறார்.
அரை பில்லியன் டொலர்
சமீபத்திய Yahoo நிதி அறிக்கை ஒன்றில், பில் கேட்ஸ் நாளுக்கு 10.95 மில்லியன் அமெரிக்க டொலர் ( இந்திய பண மதிப்பில் சுமார் ரூ 92 கோடி) வருவாய் ஈட்டி வருவதாகவே குறிப்பிட்டுள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க தினசரி வருமானம் என்பது வரவிருக்கும் ஆண்டில் கிட்டத்தட்ட அரை பில்லியன் டொலர்களை ஈவுத்தொகையாகக் குவிக்க உள்ளது.
பங்குச் சந்தையின் கணிக்க முடியாத தன்மை இருந்தபோதிலும், பில் கேட்ஸின் முதலீடுகள் அவருக்கு நிலையான மற்றும் லாபகரமான வருமானத்தை வழங்குவதாகவே கூறுகின்றனர்.
பில் கேட்ஸின் சொத்துமதிப்பில் கணிசமான பகுதி ஈவுத்தொகை செலுத்தும் பங்குகளிலிருந்து பெறப்படுகிறது. மட்டுமின்றி, அவரது முதலீடுகள் அனைத்தும் நிரந்தர வருவாய் ஈட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய ரயில்வே
மேலும், பில் கேட்ஸின் ஈவுத்தொகை வருமானத்தில் கனடிய தேசிய இரயில்வே, மைக்ரோசாப்ட் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய நிறுவனங்களே முதலிடத்தில் உள்ளன.
இந்த மூன்று நிறுவனங்களில் பில் கேட்ஸ் அதிக முதலீடு செய்துள்ளார். கனேடிய ரயில்வேயில் 54,826,786 பங்குகளை பில் கேட்ஸ் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு தோராயமாக 6.66 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் காலாண்டுக்கு ஒருமுறை ஈவுத்தொகையை வழங்குகிறது. மிக சமீபத்தில் இந்த நிறுவனத்திடம் இருந்து ஒரு பங்கிற்கு 0.6271 டொலர் ஈவுத்தொகையாக பில் கேட்ஸ் பெற்றுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 16.14 பில்லியன் டொலர் மதிப்பிலான 36,499,597 பங்குகளை பில் கேட்ஸ் கைவசம் வைத்துள்ளார். இதேப்போன்று கழிவு மேலாண்மை நிறுவனத்தில் 7.02 பில்லியன் டொலர் மதிப்பிலான 35,234,344 பங்குகளை கைவசம் வைத்துள்ளார்.
இந்த முதலீடும் பில் கேட்ஸின் ஈவுத்தொகை வருமானத்தில் கணிசமான பங்களிப்பை வழங்குகிறது. இது மட்டுமின்றி, Crown Castle, Kraft Heinz, மற்றும் United Parcel Service ஆகிய நிறுவனங்களிலும் பில் கேட்ஸ் முதலீடு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |