4.75 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய தங்கக் கழிப்பறை திருட்டு: குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை
பிரித்தானியாவின் பிரதமராக இருந்த சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த வீட்டில் அமைக்கப்பட்டிருந்த தங்க கழிப்பறை திருடப்பட்ட வழக்கில் குற்றவாளி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தங்க கழிப்பறை திருட்டு
பிரித்தானியாவின் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரிலுள்ளது Blenheim மாளிகை. இங்குதான் சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்துள்ளார்.
அந்த வீட்டில், முழுவதும் 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அதன் மதிப்பு 4.75 மில்லியன் பவுண்டுகள். அது, இலங்கை மதிப்பில், 1,90,70,96,340.00 ரூபாய் ஆகும்.
2019ஆம் ஆண்டு, அந்த கழிப்பறை திருடுபோனது!
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், தங்கத்தை விற்க உதவிய Doe என்னும் Frederick Sines என்பவரும் ஒருவர்.
தற்போது அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. Doeக்கு 21 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், இப்போதைக்கு அவர் சிறை செல்லவேண்டியதில்லை. இரண்டு ஆண்டுகளில் அவர் மீண்டும் ஏதாவது கூற்றச்செயலில் ஈடுபட்டால் மட்டுமே சிறை செல்லவேண்டியிருக்கும்.
அத்துடன், 240 மணி நேரம், ஊதியம் இல்லாமல் வேலை செய்யவும் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு இப்படி ஒரு தண்டனை விதிக்கப்பட காரணம், அவர் விலையுயர்ந்த கைகடிகாரங்கள், மற்றும் முறைப்படி நகை விற்பனை செய்பவர்கள் குறித்து நன்கு அறிந்துவைத்திருந்தார்.
அவரது அறிவை பயன்படுத்தி, கொள்ளையர்கள் அவரை தங்கள் தங்கத்தை விற்பனை செய்வதற்கு பயன்படுத்திக்கொண்டார்கள்.
ஆக, நேரடியாக அவர் குற்றச்செயலில் ஈடுபடாமல், பலன் எதுவும் எதிர்பாராமல், தங்கம் விற்பது குறித்து அந்த தங்கக் கொள்ளையர்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார் என்பதாலேயே அவருக்கு இவ்வளவு குறைந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |