இளம்பெண்ணுக்கு முத்தமிட்ட நபர்: சுவிஸ் நீதிமன்றம் நடவடிக்கை
சுவிட்சர்லாந்தில், இளம்பெண் ஒருவரின் கன்னத்தில் முத்தமிட்ட நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
இளம்பெண்ணுக்கு முத்தமிட்ட நபர்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த 52 வயது நபர் ஒருவர், அங்கு பணிபுரியும் 22 வயது இளம்பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
அந்த இளம்பெண்ணிடம் விடைபெறும்போது, அவரது கன்னத்தில் முத்தமிட்டுள்ளார் அந்த நபர்.
ஆனால், பொலிசார் அவரை கைது செய்துள்ளார்கள். நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு 500 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தான் தவறான நோக்கத்தில் முத்தமிடவில்லை என அவர் கூறியும், தவறான ஒரு செயல் மூலம் ஒருவருக்கு சிரமம் ஏற்படுத்திய குற்றத்துக்காக அவருக்கு அபராதம் விதித்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |