உலகிலேயே இரண்டாவது பெரும் கோடீஸ்வரர்... ஒரே நாளில் ரூ 127,320 கோடி இழந்து சொத்து மதிப்பும் சரிவு
ஆகஸ்டு 2ம் திகதி வெள்ளிக்கிழமை உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பலரின் சொத்து மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
15.2 பில்லியன் டொலர்
மொத்தமாக 134 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு இழப்பை எதிர்கொண்டுள்ளனர். இதில் பெரும் இழப்பை சந்தித்தவர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்.
இவர் ஒரே நாளில் 15.2 பில்லியன் டொலர் அல்லது இந்திய மதிப்பில் ரூ 127,320 கோடி அளவுக்கு இழப்பை எதிர்கொண்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அமேசான் நிறுவனம் ஒரே நாளில் பேரிழப்பை எதிர்கொள்வது தற்போது தான்.
அமேசான் பங்குகள் சுமார் 8.8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இதனால் பெசோஸின் சொத்து மதிப்பு 191.5 பில்லியன் டொலருக்கு சரிந்துள்ளது. 60 வயதான பெசோஸ் தமது வாழ்நாளில் இது மூன்றாவது முறையாக பேரிழப்பை எதிர்கொள்கிறார்.
கடந்த 2019 ஏப்ரல் 4ம் திகதி விவாகரத்து ஜீவானம்சம் அளித்த வகையில் அவரது சொத்து மதிப்பு 36 பில்லியன் டொலர் சரிவடைந்தது. 2022 ஏப்ரல் மாதம் அமேசான் பங்குகள் 14 சதவீதம் சரிவடைந்தது. இருப்பினும், உலகின் இரண்டாவது பெரும் கோடீஸ்வரராக பெசோஸ் தம்மை நிலைநிறுத்தியுள்ளார்.
912 மில்லியன் பங்குகள்
பிப்ரவரியில் மட்டும் 9 நாட்கள் சுமார் 8.5 பில்லியன் டொலர் மதிப்பிலான பங்குகளை பெசோஸ் விற்றுள்ளார். ஜூலை மாதம் மீண்டும் 5 பில்லியன் டொலர் மதிப்பிலான 25 மில்லியன் அமேசான் பங்குகளை பெசோஸ் விற்பனை செய்துள்ளார்.
மொத்தமாக 13.5 பில்லியன் டொலர் மபிப்பிலான பங்குகளை அவர் இந்த ஆண்டு மட்டும் விற்பனை செய்துள்ளார். இருப்பினும், அவரிடம் 912 மில்லியன் பங்குகள் சொந்தமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |