31 ஆண்டுகள் அனுபவம்... நாடறிந்த பிரபலமான நிறுவனத்தின் தலைவர்: ஒரே நாளில் ரூ 21735 கோடி இழப்பு
இந்தியாவின் முன்னணி பெயிண்ட் நிறுவனமான ஏசியன் பெயின்ட்ஸை நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் வழிநடத்துபவர் பிரபல தொழிலதிபர் அமித் சிங்லே.
எதிர்பாராத திருப்பமாக
கடந்த 31 ஆண்டுகளாக ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தில் பல பொறுப்புகளில் செயல்பட்டுள்ளார் சிங்லே. ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தில் நிர்வாகப் பட்டதாரியாகச் சேர்ந்த சிங்லே, ஆரம்பத்தில் விற்பனைப் பிரிவில் எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2020 ஏப்ரல் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். ஆனால் திங்கட்கிழமை அன்று, எதிர்பாராத திருப்பமாக சிங்லே பெரும் நெருக்கடியை எதிர்கொண்டார்.
ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது. ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 43.71 சதவீதம் சரிந்து 693.66 கோடி ரூபாயாக நிகர லாபம் பதிவு செய்ததை அடுத்து, திங்களன்று ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் 8 சதவீதம் சரிவடைந்தன.
8.18 சதவிகிதம் சரிவடைந்ததை அடுத்து ஒரு பங்கின் விலை ரூ 2,542.65 என விற்பனையானது. அதே நாளில் 9.47 சதவிகிதம் சரிவடைந்து ஒரு பங்கின் விலை ரூ 2,507 என விற்பனையானது.
நான்கு குஜராத்தி நண்பர்களால்
இதனால் திங்களன்று ஒரே நாளில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் சுமார் 21735 கோடி ரூபாயை இழந்துள்ளது. ஒரே நாளில் பெரும் இழப்பை அடுத்து தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 243,890 கோடி என பதிவாகியுள்ளது.
ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனமானது 1942ல் நான்கு குஜராத்தி நண்பர்களால் கைவாதி பகுதியில் உள்ள ஒரு கேரேஜில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |