இரவு தூக்கத்திற்கு ரயில் நிலையங்களை நாடியவர்... இன்று அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ. 19,000 கோடி
குடும்ப சூழல் காரணமாக இரவு தூக்கத்திற்கு ரயில் நிலையங்களை நாடியவர், இன்று ரூ.36,000 கோடி மதிப்பிலான நிறுவனங்களுக்கு உரிமையாளராக உள்ளார்.
தனது விதியை மாற்றினார்
இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான சத்தியநாராயணன் நுவல் 1995ல் சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா என்ற நிறுவனத்தை நிறுவினார். ஆனால் அவரது அதுவரையான பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
நுவல் தனது கடின உழைப்பு மற்றும் கூர்மையான வணிகத் திறன் மூலம் தனது விதியை மாற்றினார். ராஜஸ்தானின் பில்வாரா பகுதியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த சத்தியநாராயணன் நுவல், இளம் வயதில் இருந்தே வணிகத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தார்.
18 வயதில் மை உற்பத்தி செய்யும் தொழில் ஒன்றை துவங்கிய நுவல், அது தோல்வியில் முடியவே, மனம் தளர்ந்துவிடாத நுவல் பல்வேறு தொழில் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டும் வந்துள்ளார்.
குடும்ப சூழல் காரணமாக 10ம் வகுப்பு வரையில் மட்டுமே கல்வி பயின்றுள்ளார். 1977ல் மகாராஷ்டிரா மாகாணத்தில் வேலை தேடிவந்தது அவரது வாழ்க்கையை மொத்தமாக மாற்றியது.
உச்சங்கள் பல தொட்டார்
பல்ஹர்ஷா பகுதியில் அப்துல் சத்தார் அல்லாபாய் என்பவரை நுவல் சந்திக்க, அவருக்கு ரூ.1000 செலுத்தி புதிதாக தொழில் ஒன்றை முன்னெடுத்தார் நுவல். இந்த அப்துல் சத்தார் அல்லாபாய் கிணறு தோண்டுவதற்கும், சாலைகள் அமைப்பதற்கும், சுரங்கங்களைத் தோண்டுவதற்கும் பயன்படுத்தப்படும் வெடிபொருள் வியாபாரியாக இருந்தார்.
இவரது உரிமத்தை பயன்படுத்தியே, தொடக்கத்தில் நுவல் தொழில் செய்து வந்தார். ஆனால் பிரித்தானிய நிறுவனமான Imperial Chemical Industries நுவலுக்கு நேரடியாக வாய்ப்புகளை அளிக்க முன்வர, அதன் பின்னர் நுவல் உச்சங்கள் பல தொட்டார்.
இவரது Solar Industries India நிறுவனம் பத்தாண்டுகளில் 1,700 சதவீத வளர்ச்சியை கண்டது. 2012ல் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.765 கோடி என இருந்தது. 2022ல் அது 35,000 கோடி என அதிகரித்தது. சத்தியநாராயணன் நுவலில் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 19,000 கோடி ரூபாய் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |