பெண்களின் நிர்வாணப் படங்களை களவாடிய நபருக்கு ஏற்பட்ட நிலை?
இணையம் வழியாக பெண்களின் நிர்வாணப் படங்களை களவாடிய நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இவ்வாறு பாரியளவிலான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் களவாடப்பட்டுள்ளது.
ஐ-க்ளவுட் எனும் இணைய வழி தொழில்நுட்பத்தின் ஊடாக தனிப்பட்ட நபர்கள் சேமித்து வைத்திருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இவ்வாறு களவாடப்பட்டு அவை பிற நபர்களுடன் பகிரப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த 40 வயதான Hao Kuo Chi என்ற நபர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐ-க்ளவுட் கடவுச் சொற்களை களவாடி அவற்றின் ஊடாக சுமார் 620000 புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை குறித்த நபர் களவாடியுள்ளார்.
கடவுச்சொற்களை களவாடி எப்பள் நிறுவனத்தின் சேர்வர்களுக்கு அத்து மீறி ஊடுறுவி இவ்வாறு பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை குறித்த நபர் களவாடியுள்ளார்.
இந்தக் குற்றச் செயலை தாம் மேற்கொண்டதாக குறித்தந பர் ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த நபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பல ஜீ-மெயில் முகவரிகளை பயன்படுத்தி பயனர்களை ஏமாற்றி இவ்வாறு கடவுச்சொற்கள் உள்ளிட்ட விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே பயனர்கள் தமக்கு வரும் மின்னஞ்சல்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமெனவும் தங்களுடைய அந்தரங்கத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.