பிரான்சில் தேவாலயத்துக்கு தீவைக்க முயன்ற நபர்: பொலிசார் அதிரடி
பிரான்சிலுள்ள தேவாலயம் ஒன்றிற்கு தீவைக்க முயன்ற ஒருவரை, பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளார்கள்.
தேவாலயத்துக்கு தீவைக்க முயன்ற நபர்
இன்று காலை, பிரான்சின் நார்மண்டி பகுதியிலுள்ள Rouen என்னுமிடத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு ஒருவர் தீவைக்க முயன்றுள்ளார்.
கையில் கத்தியுடன் வந்த அவரை பொலிசார் சுட்டுக்கொன்றதாக, பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin, சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
இன்று காலை 6.45 மணியளவில், Rouen என்னுமிடத்திலுள்ள தேவாலயம் ஒன்றிலிருந்து புகை வருவது குறித்து அறிந்த பொலிசார் உடனடியாக அங்கு விரைந்துள்ளார்கள்.
அப்போது, கையில் கத்தி மற்றும் இரும்புக் கம்பி ஒன்றுடன் ஒருவர் பொலிசாரை நோக்கி ஓடிவந்துள்ளார். உடனடியாக பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட, அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
உடனடியாக செயல்பட்டு பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்த பொலிசாருக்கு பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
நகர மேயரான Nicolas Mayer-Rossignol என்பவரும், பொலிசாருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளதுடன், தேவாலயத்தில் வைக்கப்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |