மொத்த சொத்து மதிப்பு ரூ 30,000 கோடி... முகேஷ் அம்பானிக்கு முன்பே ஹெலிகொப்டர் வாங்கிய நபர்
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பலர் தற்போதைய தங்கள் இடத்தை எட்டுவதற்கு முன்பு சிறு வணிகங்களில் ஈடுபட்டு கடும் உழைப்பால் உயரங்களைத் தொட்டுள்ளனர்.
பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில்
அப்படியானவர்களில் ஒருவர் சின்னதாக தொடங்கிய ஒரு வணிகம், இன்று உலகில் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவரை உயர்த்தியுள்ளது. அந்த நபர் RP குழுமத்தின் தலைவரான ரவி பிள்ளை.
RP குழுமம் ஈடுபடாத தொழில்கள் இல்லை. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் ரவி பிள்ளையின் தற்போதைய சொத்து மதிப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலராகும். அதாவது இந்திய பண மதிப்பில் ரூ 30020 கோடி.
துபாய் மாகாணத்தில் அமைந்துள்ள புர்ஜ் கலீஃபா கோபுரத்தில் சொகுசு குடியிருப்பு உட்பட உலகின் பல்வேறு நகரங்களில் ரவி பிள்ளைக்கு குடியிருப்புகள் உள்ளன. மட்டுமின்றி, இந்தியாவின் தொழிலதிபர்களில் முதல் முறையாக ஹெலிகொப்டர் ஒன்றை சொந்தமாக வாங்கியதும் ரவி பிள்ளை என்றே கூறப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி
டாடா குழுமத்திடம் ஹெலிகொப்டர் இருந்தும், அது தனி நபருக்கானது அல்ல. மேலும், முகேஷ் அம்பானி சொந்தமாக ஹெலிகொப்டர் வாங்கும் முன்னரே ரவி பிள்ளை Airbus நிறுவனத்திடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் செலவிட்டு தமது கனவை நிறைவேற்றியுள்ளார்.
இன்று, மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களின் மிகப்பெரிய நிறுவனங்களில் அவரது RP குழுமம் உள்ளது. கேரளாவில் பிறந்த ரவி பிள்ளை, அவரது சொந்த மாநிலத்தில் அவரது சிறிய கட்டுமானத் தொழில் பொருளாதார நெருக்கடியால் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து 1978ல் சவுதி அரேபியாவுக்கு குடிபெயர்ந்தார்.
ஆனால் உள்ளூர் நபர் ஒருவரின் உதவியுடன் அதே ஆண்டில் கட்டுமான நிறுவனம் ஒன்றை சவுதி அரேபியாவில் தொடங்கினார். இன்று அந்த நிறுவனம் RP குழுமமாக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |