உறுப்புகளைத் திருடுவதற்காக சிறுபிள்ளையை பிரித்தானியாவுக்கு கடத்திக்கொண்டு வந்த வெளிநாட்டவர்கள்: ஒரு பகீர் செய்தி
வெளிநாடு ஒன்றிலிருந்து ஒரு சிறுபிள்ளையை அதன் உள்ளுறுப்புக்களுக்காக பிரித்தானியாவுக்குக் கடத்திக்கொண்டு வந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு திடுக்கிடவைக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
நைஜீரியாவைச் சேர்ந்த Beatrice Nwanneka Ekweremadu (55), Ike Ekweremadu (60) என்னும் தம்பதியர், சிறுபிள்ளை ஒன்றைக் கடத்திக்கொண்டு வருவதாக இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
அவர்கள் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பிள்ளையை மீட்ட பொலிசார், அந்தப் பிள்ளை பாதுகாப்பாக இருப்பதாகவும், அதை நல்லபடியாக கவனித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
தம்பதியர் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இன்று Uxbridge மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்கள்.
2017ஆம் ஆண்டு, முன்னாள் நைஜீரிய அமைச்சரும், கேம்பிரிட்ஜ் பல்கலையில் பயின்ற சட்டத்தரணியுமான Femi Fani-Kayode என்பவர், இந்த கடத்தல் தொடர்பாக அதிரவைக்கும் தகவல் ஒன்றைத் தெரிவித்திருந்தார்.
வட ஆப்பிரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டு, அங்கு உள்ளுறுப்புகள் திருடப்படுவோரில் 75 சதவிகிதத்தினர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் என்னும் பதறவைக்கும் தகவலைத் தெரிவித்திருந்த Femi Fani-Kayode, அடுத்துக் கூறிய விடயத்தைக் கேட்டால் அதிர்ச்சியில் இதயமே நின்றுவிடும்.
ஆம், அப்படி உள்ளுறுப்புகள் அகற்றப்பட்ட பிள்ளைகளின் உடல்கள், கபாப்களைப் போல வறுக்கப்பட்டுவிடும், அதாவது அவர்கள் உயிருடன் தீயில் வறுக்கப்பட்டுவிடுவார்கள் என்று கூறியிருந்தார் Femi Fani-Kayode!
சற்று முன் வந்த செய்தி: உள்ளுறுப்புகளுக்காக பிரித்தானியாவுக்கு பிள்ளையைக் கடத்திக்கொண்டு வந்த Ike Ekweremadu, நைஜீரியாவின் முன்னாள் செனேட் துணைத் தலைவர் என தகவல் வெளியாகியுள்ளது.