திருமண நிகழ்வில் ஆண் வேடமிட்டு சென்று மணமகன் மீது ஆசிட் வீசிய பெண்
இந்திய மாநிலம் சட்டீஸ்கரில் திருமண நிகழ்வில் ஆண் வேடமிட்டு சென்று, மணமகன் மீது ஆசிட் வீசிய பெண்ணின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆசிட் வீசிய பெண்
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் அமைந்துள்ள சோட்டே அமபால் கிராமத்தை சேர்ந்த தம்ருதர் பாகேல்(25) என்பவருக்கும், அப்பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.
@gettyimages
அப்போது திருமண நிகழ்வின் போது கூட்டத்திற்குள் ஆண் வேடமிட்டு வந்த பெண் ஒருவர், நேராக சென்று மணமகன் மீது ஆசிட் வீசியுள்ளார். ஆசிட் பட்டதில் அனைவரும் பதற்றமாக அந்த பெண் அங்கிருந்து தப்பியுள்ளார்.
@gettyimages
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தம்ருதர் பாகேல், முகத்தில் பலமான தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறை திருமண மண்டபத்தில் சிசிடிவி மூலம் ஆண் வேடமணிந்து வந்த பெண்ணை அடையாளம் கண்டுள்ளனர்.
7 வருட காதல்
இது தொடர்பாக தம்ருதரி விசாரிக்கையில் அந்த பெண் அவரது முன்னாள் காதலி நிவேதிதா பால் எனவும், இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
பின்னர் தம்ருதரி அந்த பெண்ணை திருமணம் செய்கிறேன் என ஏமாற்றி விட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் நிவேதிதா அவர் மீது ஆசிட் வீசியுள்ளார்.
@thelallantop
இதனை தொடர்ந்து நிவேதிதா பாலை கைது செய்த பொலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், தான் வேலை செய்யும் தொழிற்சாலையிலிருந்து ஆசிட்டை எடுத்து வந்தாக நிவேதிதா கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக பஸ்தார் காவல்துறை கூடுதல் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் காதலித்து ஏமாற்றிய ஆணின் மீது தைரியமாக ஆசிட் வீசிய பெண்ணின் செயல், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.