லொட்டரி வென்றதை நடித்து காட்டிய நபருக்கு மீண்டும் அடித்த அதிர்ஷ்டம்! நேரலையில் உலகமே பார்த்த காட்சி இப்போது வைரல்
கோமாவில் இருந்து மீண்டு வந்த நபருக்கு விலைஉயர்ந்த கார் ஒன்று பரிசாக விழுந்தது.
பரிசு விழுந்ததற்காக தொலைக்காட்சி ஒன்றிருக்கு லொட்டரி சீட்டை வாங்கி சுரண்டுவது போல் நடித்த அவருக்கு மீண்டும் ஒரு பெரிய தொகை பரிசாக விழுந்தது. (வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது)
கோமாவில் இருந்து மீண்ட அவுஸ்திரேலிய நபர் ஒருவர் லொட்டரியில் பரிசு வென்றதை நடித்துக்காட்டும்போது, மீண்டும் அவரும் பெரும் தொகை பரிசாக விழுந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் இப்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வலம்வருகிறது.
மிகவும் சுவாரசியமாக இந்த சம்பவம் 1999-ஆம் ஆண்டு நடந்தது.
அப்போது 37 வயதாக இருந்த Bill Morgan எனும் அந்த அதிர்ஷ்டசாலி நபர், 1998-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால், அதிர்ஷ்வசமாக அடுத்த 14 நிமிடங்களில் மருத்துவர்களின் உதவியால் மீண்டும் உயிர் பெற்றார். ஆனால், கோமா நிலைக்கு சென்ற அவர், 15 நாட்கள் கழித்து சுய நினைவை அடைந்தார்.
மெல்போர்னின் புறநகர்ப் பகுதியில் உள்ள கேரவன் பூங்காவில் வசித்து வந்த அவர் அப்போது ஒரு 'மெடிக்கல் மிராக்கள்' என்று அழைக்கப்பட்டார்.
மரணத்தை வென்று வந்த அவர் ஒரு வருடத்திற்குப் பிறகு ஒரு உடனடி கீறல் லொட்டரி சீட்டை வாங்கி, அதில் 30,000 டொலர் மதிப்புள்ள புத்தம் புதிய டொயோட்டா கொரோலா காரை வென்றார். இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக, அவர் மீண்டும் அதே லொட்டரி கடையில், லொட்டரி வாங்கி சுரண்டுவது போல் வீடியோ காட்சிகள் பதிவுசெய்யப்பட்டபோது தான் அது நடந்தது.
அந்த அதிர்ஷடம் இன்னும் அவரை விட்டு செல்லவில்லை என்பது தெரிந்தது, நடித்துக்காட்டுவதற்காக சுரண்டப்பட்ட அந்த லொட்டரி சீட்டில் 250,000 டொலர் பரிசுத்தொகை விழுந்தது.
அந்தத் தருணம் முழுவதுமாக தோகைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. அதில், Morgan லொட்டரி சேட்டு விற்பனைக்கு கடையையும், கமெராவையும் திரும்பிப் பார்த்து "நான் $250,000 வென்றுள்ளேன்" என்று கூற அங்கிருந்தவர்கள் அவர் நடிக்கிறாரா, என்ன சொல்கிறார் என்பது போல் பார்ப்பார்த்துள்ளனர்.
"நான் கேலி செய்யவில்லை" என்றும் 'எனக்கு இன்னொரு மாரடைப்பு வரும் என்று நினைக்கிறேன்.' என்று கூறி அவர் சுரண்டிய சீட்டை அங்கிருந்தவர்களிடம் கொடுக்க, அவர் உண்மையாகவே வெற்றி பெற்றுள்ளார் என்பதை அறிந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மோர்கன் உடனடியாக தனது வருங்கால மனைவியிடம் தொலைபேசி அழைப்பில், "நாம் ஒரு வீடு வாங்கலாம்" என்று தான் பரிசு வென்றதை கூறும் காட்சிகள் உலகம் முழுவதும் நேரலையில் ஒளிபரப்பானது.
In 1999 this man was asked to
— Historic Vids (@historyinmemes) September 5, 2022
reenact his recent lottery win for TV
and ended up winning again on
camera pic.twitter.com/pXh6IOGU5B
இந்த வீடியோ 22 ஆண்டுகள் கழித்து தற்போது சமூக வலைத்தளங்களை வெளியாகி, மீண்டும் வைரலாகிவருகிறது.
இப்போது 59 வயதாகும் மோர்கன் மீண்டும் ஒரு நட்சத்திரம் போல் வைரலாகி வருகிறார். இப்போதும் கூட தொடர்ந்து லொட்டரி சீட்டுக்களை வாங்கி வருகிறார். ஆனால் லொட்டரியும் சரி அவரது உடல்நிலையும் சரி அப்போது இருந்த அதே அதிர்ஷ்டம் இல்லை என்று கூறியுள்ளார்.