மான்செஸ்டர் யுனைடெடை வீழ்த்தி FA கோப்பையை கைப்பற்றிய மான்செஸ்டர் சிட்டி! 7வது முறையாக சாம்பியன்
FA கோப்பை இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
FA கோப்பை இறுதிப்போட்டி
இங்கிலாந்தில் நேற்று இரவு Wembley மைதானத்தில் நடந்த FA இறுதிப் போட்டியில், மான்செஸ்டர் சிட்டி மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக தொடங்கி ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே சிட்டி அணியின் கேப்டன் குன்டோகான் எதிரணி அதிர்ச்சி கொடுத்தார்.
Adam Davy/PA Images/Getty Images
அவர் தன்னிடம் வந்த பந்தை full valleyயில் கோலாக மாற்றினார். இதனால் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் மைதானமே அதிர்ந்தது.
அதனைத் தொடர்ந்து, மான்செஸ்டர் யுனைடெட் வீரர் 33வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.
7வது முறையாக சாம்பியன்
பின்னர் 51வது நிமிடத்தில் குன்டோகான் மீண்டும் ஒரு கோல் அடித்தார். அதுவே வெற்றி கோலாக மாறியது.
இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்று, 7வது முறையாக FA கோப்பையை வென்றது.
இந்த வெற்றியை மான்செஸ்டர் சிட்டி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மறுபுறம் யுனைடெட் ரசிகர்களின் இதயங்கள் நொறுங்கியது.
Nick Potts/Press Association/AP