7 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 80 ரன்! the Hundred-யில் சன்ரைசர்ஸை நொறுக்கிய டிம் செய்பெர்ட்
சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு எதிரான the Hundred போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த the Hundred போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியை வீழ்த்தியது.
127 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகளுக்கு இடையிலான the Hundred போட்டி மான்செஸ்டரின் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் நடந்தது.
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 127 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மிட்சேல் மார்ஷ் 32 (23) ஓட்டங்களும், ஜாக் கிராவ்லே 31 (28) ஓட்டங்களும் எடுத்தனர்.
கஸ் அட்கின்ஸன் 3 விக்கெட்டுகளும், சோனி பேக்கர் 2 விக்கெட்டுகளும், டங், டாவ்ஸன், நூர் அகமது மற்றும் பவுல் வால்டர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
செய்பெர்ட் ருத்ரதாண்டவம்
பின்னர் ஆடிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் பவுல் வால்டர் (Paul Walter) மற்றும் டிம் செய்பெர்ட் (Tim Seifert) இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட்டனர்.
ருத்ரதாண்டவம் ஆடிய செய்பெர்ட் 40 பந்துகளில் 7 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் விளாசினார். வால்டர் 28 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் மான்செஸ்டர் அணி 68 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 128 ஓட்டங்கள் எடுத்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |