மான்செஸ்டர் யூத ஆலயத் தாக்குதல்: மேலும் 3 சந்தேக நபர்கள் கைது
பிரித்தானியாவில் யூத ஆலய தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யூத ஆலயத்தின் மீதான தாக்குதல்
மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பார்க் ஹீப்ரு கான்ஸ்டிரிகேஷன் யூத ஆலயத்திற்கு வெளியே நடந்த தாக்குதலில் இரண்டு யூதர்கள் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பியதுடன், பிரித்தானியாவில் அதிகரிக்கும் யூத வெறுப்பு அரசியல் முறியடிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கீர் ஸ்டார்மர் உறுதிமொழி ஏற்றுள்ளார்.
புதிதாக மூன்று பேர் கைது
இந்நிலையில் யூத ஆலய தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேர் கைது கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை கைது செய்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 14 வயது முதல் 40 வயதுடைய ஒரு ஆணும், இரண்டு பெண்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் மீதும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பிடியாணைக்கு விண்ணபிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் பிரித்தானியாவின் பயங்கரவாத தடுப்பு காவல் பிரிவின் தலைவர் லாரன்ஸ் டெய்லர் வெளியிட்ட தகவலில், கைது செய்யப்பட்டுள்ள 35 வயது ஜிஹாத் அல்-ஷமி தீவிர இஸ்லாமிய கருத்தியலால் தூண்டப்பட்டவர் என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |