பிரித்தானியாவில் யூத ஆலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்: 2 உயிரிழப்பு: அதிகாரிகள் வெளியிட்ட தகவல்
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் யூத ஆலயத்தில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூத ஆலயத்தின் மீது தாக்குதல்
வடக்கு மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பார்க் யூத ஆலயத்தில் இன்று காலை 9.31 மணி அளவில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு யூதர்கள் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தாக்குதல் தொடங்கப்பட்ட 7 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தாக்குதல்தாரியை சுட்டுக் கொன்றனர்.
ஆரம்பத்தில் தாக்குதல்தாரி வெடிகுண்டு அணிந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டாலும், பின்னர் அந்த பொருட்கள் செயல்படாதது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரி குறித்த முக்கிய தகவல்
இந்நிலையில் தாக்குதல் நடத்திய நபர் குறித்த முக்கிய தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அதில், அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தாக்குதல்தாரி இதற்கு முன் எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு பட்டியலிலும் இடம்பெற்றிருக்க வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வேறு ஏதேனும் விசாரணை பதிவுகளில் அவரது தொடர்புடைய விவரங்கள் உள்ளதா என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |