பிரித்தானிய யூத ஆலய தாக்குதல்: உயிரிழந்தவர்களில் ஒருவர் பொலிசாரால் சுடப்பட்டதாக தகவல்
இங்கிலாந்திலுள்ள கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள யூத தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரித்தானிய யூத ஆலய தாக்குதல்
நேற்று காலை, கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள யூத ஆலயம் ஒன்றின் முன் நின்றவர்கள் மீது ஒருவர் தனது காரைக் கொண்டு மோதியுள்ளார். ஒருவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் தாக்குதல்தாரி ஆலயத்துக்குள் நுழையாமல் தடுப்பதற்காக அவரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.
பொலிசார் சுட்டதில் தாக்குதல்தாரி பலியானார். அவரது பெயர் Jihad Al-Shamie (35) என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிரியாவைச் சேர்ந்த அந்த நபர் சிறுவயதில் பிரித்தானியாவுக்கு வந்து 2006ஆம் ஆண்டு பிரித்தானிய குடியுரிமையும் பெற்றுள்ளார்.
அதிரவைக்கும் ஒரு தகவல்
தேவாலய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் Adrian Daulby (53) மற்றும் Melvin Cravitz (66) என்னும் இருவர் ஆவர். மேலும், காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், தாக்குதலின்போது உயிரிழந்தவர்களில் ஒருவர் பொலிசாரால் சுடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம், தாக்குதல்தாரி கையில் கத்திதான் வைத்திருந்தார், கத்தியால்தான் தாக்கினார். அவரிடம் துப்பாக்கி எதுவும் இல்லை.
ஆக, அவர் ஆலயத்துக்குள் நுழைந்து மேலும் பலரை தாக்குவதைத் தடுப்பதற்காக பொலிசார் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது, பொலிசாரின் துப்பாக்கி குண்டு தாக்கியதில்தான் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
#UPDATE | Chief Constable Sir Stephen Watson has provided an update following yesterday’s tragic incident on Middleton Road in Crumpsall. pic.twitter.com/VWTpOE4KG3
— Greater Manchester Police (@gmpolice) October 3, 2025
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவருக்கும் துப்பாக்கிக்குண்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. அவரும் பொலிசார் சுடும்போது தாக்கப்பட்டிருக்கலாம் என கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |