இங்கிலீஷ் பிரீமியர் லீக்: 3-வது இடத்துக்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடெட்!
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்டை வீழ்த்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் இந்த சீசனில் தொடர்ந்து தன்னை வலுபடுத்திவரும் மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) அணி, ஞாயிற்றுக்கிழமை (16 ஏப்ரல்) நடைபெற்ற ஆட்டத்தில் 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்டை (Nottingham Forest) வீழ்த்தியது.
இதன்மூலம் மான்செஸ்டர் யுனைடெட் புள்ளிப் பட்டியலில் 3-ஆம் இடத்துக்கு முன்னேறியது.
PHOTO: REUTERS
இரண்டு கோல்
இப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 32-ஆவது நிமிடத்தில் ஆண்டனியும் (Antony) 76-வது நிமிடத்தில் டியோகோ டலோட்டும் (Diogo Dalot) கோல் அடித்து அசத்தினர்.
இந்த சீசனில் மான்செஸ்டர் யுனைடெடும் ஃபாரெஸ்ட்டும் இதுவரை ஒரு EFL கிண்ணம் உட்பட 3 முறை நேரடியாக மோதியுள்ளன. அதில் அனைத்து போட்டிகளிலும் மான்செஸ்டர் யுனைடெடுக்கு வெற்றி கிடைத்தது.
PHOTO: AP
நிறைவான வெற்றி
மான்செஸ்டர் யுனைடெட் பற்றிப் பேசிய அணித் தலைவர் எரிக் டென் ஹாக் (Erik Ten Hag) இதனை "நிறைவான வெற்றி" என கூறியுளளார்.
இதற்கிடையே, கடைசியாக விளையாடிய 9 ஆட்டங்களில் வெற்றிபெறாத நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்ட் அணி நேற்றைய ஆட்டத்தில் 4 முறை ஆட்டக்காரர்களை மாற்றியது குறிப்பிடத்தக்கது.
PHOTO: REUTERS